சபாநாயகரின் ஹாட் சீட்டில் சத்யபாமா அமர்ந்ததுமே! நினைவுக்கு வந்த ஏ.எஸ்.பொன்னம்மாள்! யார் இவர்?

  • சென்னை: தமிழக சட்டசபையின் மாற்று தலைவராக தவெக எம்எல்ஏவும் முன்னாள் எம்பியுமான சத்யபாமா அமர்ந்திருந்த நிலையில் ஏ.எஸ்.பொன்னம்மாள் என்பவர் கவனம் பெற்றுள்ளார். அது போல் இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர் குறித்த தகவல்களையும் பார்க்கலாம்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி பொது பட்ஜெட் தாக்கலானது. இதையடுத்து 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்ஜெட் மீது விவாதம் நடந்தது.

    Advertisement

    பின்னர் தற்போது மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் அனல் பறக்கும் விவாதங்களும், அமளிகளும், நகைச்சுவைகளும், கோபதாபங்களும் அதிகமாகவே உள்ளன.

    சட்டசபை நிகழ்வுகளை சபாநாயகர் நடத்துவார், அவர் இல்லாத போது துணை சபாநாயகர் நடத்துவது வழக்கம். இதே இருவரும் இல்லாத போது அவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் குழு அமைக்கப்படுவது வழக்கம்.

    அந்த குழுவில் சத்யபாமா, தவெக எம்எல்ஏக்கள் விஜய் சரவணன், மதார் பதுருதீன், திமுக சார்பில் பாட்சா முத்துராமலிங்கம், அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம், காங்கிரஸின் தாரகை கத்பர்ட் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    Advertisement

    இது ஏற்கெனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் நேற்றைய தினம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரும் இல்லை, துணை சபாநாயகர் ரவிசங்கரும் அவையில் இல்லை. இதனால் மாற்று சபாநாயகராக சத்திய பாமா அவையை நடத்தினார்.

    இவரது செயல்பாட்டை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சபையை மிகவும் அழகாக வழிநடத்தினார் என ஜேசிடி பிரபாகரே பாராட்டு தெரிவித்துள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத், "மாண்புமிகு பேரவைத் தலைவரே" என அழைத்த போது குறுக்கிட்ட சத்யபாமா, "மாற்று பேரவைத் தலைவர்" என திருத்தம் செய்தார்.

    அது போல் யாராவது அதிக நேரம் பேசினாலும் மிகவும் தன்மையாக "நீங்கள் இத்தனை நிமிடங்கள் பேசிவிட்டீர்கள், எனவே சுருக்கமாக முடித்துக் கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார்.

    Advertisement

    அது போல் சபாநாயகர் நாற்காலியில் நீண்ட காலம் கழித்து ஒரு பெண் அமர்ந்தது, பெண்களுக்கு பெருமையை கொடுத்துள்ளது. இதை திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    அவர் கூறுகையில், "லேடி வெலிங்டன் இந்த பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவைத் தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக எல்லோரிடத்திலும் இருக்கும் எதிர்பார்ப்பு. அந்த வகையில் மாற்றுத் தலைவராக அமர்ந்த சத்யபாமாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்திருந்தார்.

    தமிழக சட்டசபையின் மாற்றுத் தலைவராக சத்யபாமா அமர்ந்த நிலையில் ஏ.எஸ்.பொன்னம்மாள் என்பவர் கவனம் பெற்று வருகிறார். இவர் நிலக்கோட்டையைச் சேர்ந்த காங்கிரஸின் நீண்டகால எம்எல்ஏ. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு முறையே 1989 ஆம் ஆண்டும், 1991 ஆம் ஆண்டும் தற்காலிக சபாநாயகராக இருந்து பதவி பிரமாணம் செய்து வைத்த பெருமை இவருக்கு உள்ளது.

    Advertisement

    அது போல் இந்தியாவின் முதல் பெண் சட்டசபை தலைவர் ஹரியானாவின் ஷன்னோ தேவி ஆவார். இவர் 1966-67 ஆம் ஆண்டு வரை பொறுப்பேற்று அவையை நடத்தியிருந்தார். தமிழகத்தில் இத்தனை காலம் கழித்து பெண் ஒருவர் சபாநாயகர் சீட்டில் அமர்ந்தது பெருமையை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரம் ஒரு பெண்ணை அந்த சீட்டில் உட்கார வைக்க இத்தனை ஆண்டு காலமா என்ற வருத்தமும் எழுந்துள்ளது.

    English Summary

    Who was the first Woman speaker in India? Who was the first woman temporary speaker in Tamil nadu Assembly?