சென்னை: "எத்தனை நாள் தான் கொடி பறக்குது என்று பார்ப்போம்.." என தவெகவை விமர்சித்து சத்யராஜ் பேசியுள்ளார். மேலும், மா சுப்பிரமணியனை முன்னாள் அமைச்சர் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எந்நாளும் அவர்தான் அமைச்சர் தான். இந்நாள் அமைச்சருக்கும் அவர்தான் வழிகாட்டி.. திமுக தேர்தலுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி இல்லை. பெரியார் வழியில் சமூக சீர்திருத்த இயக்கமாக இருப்போம் என்று சொன்ன இயக்கம்தான் திமுக என்றும் சத்யராஜ் பேசினார்.
சென்னையில் திமுக சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய சத்யராஜ் கூறியதாவது:- சமூகத்தில் கீழ்நிலையில் இருப்பவர்களை மேல் நிலைக்கு கொண்டு வருவதுதான் எங்களின் அடிப்படை கொள்கை. அது ஆட்சியில் இருந்தாலும் சரி ஆட்சியில் இல்லாவிட்டாலும் சரி.. ஆட்சியில் இருந்தால் திமுக ஆளும் கட்சி.. ஆட்சியில் இல்லாவிட்டால் ஆளும் கட்சியை ஆளும் கட்சி. ஏனெனில் யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் இவர்கள் போட்டுக்கொடுத்த பாதையில்தான் ஆட்சி நடத்தியாகணும்.
நாம வாங்கி கொடுத்த ஆட்டோவில் வேற எதோ ஒரு கொடி பறக்குது என்று சொன்னார்கள். பார்ப்போம் எவ்வளவு நாள்தான் கொடி பறக்குது என்று.. மாற்றம் மாற்றம் என்று அவசரப்பட்டு போட்டுவிட்டோம். குழந்தைகள் எல்லாம் நண்பா நண்பீஸ் எல்லாம் பெரியவங்களை போட்டு மடக்கி.. எனக்கு தெரியும்.. எங்க மாமா ஒருவருக்கு வயது 75 ஆச்சு.. அவரு எப்பவுமே இரட்டை இலைக்குதான் போடுவார். தலைவர் காலத்தில் இருந்து எம்.ஜிஆருக்குதான் போடுவோம் என்பார்.. இந்த தடவை யாருக்கு போட்டீங்க என்று கேட்ட போது, இந்த தடவை விசிலுக்கு போட்டோம்.. என் பொண்ணு அடம் பிடிச்சி போடவச்சிருச்சி.. அதுக்காக இரட்டை இலையை விட்டுகொடுத்துட்டு போடலமா அப்டின்னு சொன்னார்.. இப்போ அந்த பொண்ணு அடம் பிடிக்கும் என நினைக்கிறேன்.. அடுத்த தடவை உங்களுக்கு எந்த கட்சி பிடிக்குமோ அவுங்களுக்கு பொடுங்கள் என்று.. அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்.. இட ஒதுக்கீட்டிற்காகவே ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்.. இன்னைக்கு யாரு கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைத்தாலும் எங்களின் கொள்கை தலைவர்கள் பெரியார், அம்பேத்கர் என்று சொல்லித்தான் ஆகணும்.. திராவிடமும் தமிழ் தேசியமும் எங்களின் இரண்டு கண்கள் என்று சொல்லித்தான் ஆகனும். அந்த நிலமைக்கு கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதுதான் திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சாதனை. மா சுப்பிரமணியனை முன்னாள் அமைச்சர் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் எந்நாளும் அவர்தான் அமைச்சர். இந்நாள் அமைச்சருக்கும் அவர்தான் வழிகாட்டி.. இந்நாள் சுகாதாரத்துறை அமைச்சர் யார் என்று எனக்கு தெரியவில்லை.. மா. சுப்பிரமணியண் அமைத்து கொடுத்த படிக்கட்டில்தான் அவர் மேலே வந்து நின்னுட்டு இருக்கார். அதனால், அவர் நன்றியோடு இவரை (மா.சுப்பிரமணியன்) நினைச்சி பார்த்துட்டு இருப்பார். அவர் வெளியே சொல்லாவிட்டாலும் மனசாட்சிக்கு தெரியும். இன்ஸ்டகிராம், ட்விட்டர் என எதிலுமே நான் இல்லை. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் சொன்னார்கள். முதலில் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். திமுக தேர்தலில் பங்கேற்பதற்காக தொடங்கப்பட்ட கட்சியே இல்லை. திமுகவின் முதல் மாநில மாநாடு 1952 ல் நடக்கிறது. அதில் ஒரு ஓட்டெடுப்பு நடக்கிறது. 1954ல் நடைபெறும் தேர்தலில் நிற்கனுமா? வேண்டாமா? என்று நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் பெரும்பாலான திமுகவினர் தேர்தலில் நிற்க வேண்டாம்.. பெரியார் வழியில் சமூக சீர்திருத்த இயக்கமாக இருப்போம் என்று சொன்ன இயக்கம்தான் திமுக. சமூக தொண்டுதான் திமுகவின் முதல் கொள்கை. தேர்தலில் நிற்பது எல்லாம் இரண்டாவதுதான். என்று சத்யராஜ் பேசினார்.எவ்வளவு நாள் பறக்குதுன்னு பார்ப்போம்
மா சுப்பிரமணியன் இப்போதும் அமைச்சர் தான்
தேர்தலில் நிற்பதற்காக திமுக ஆரம்பிக்கப்படவில்லை