சவ்ரவ் தாஸ் வெளிநாட்டவரா? சென்னை உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு.. மத்திய அரசுக்கு நோட்டீஸ்

  • சென்னை: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸின் குடியுரிமை, அவரது குடும்ப பின்னணி பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    Advertisement

    இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.

    Advertisement

    இந்த போராட்டம் காரணமாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனரும், ஒருங்கிணைப்பாளருமான அபிஜித் தீப்கே, இணை ஒருங்கிணைப்பாளர்களான சவ்ரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா உள்பட பலரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தான் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் சவ்ரவ் தாஸ்க்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. கணேஷ் குமார் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

    மனுவில், ''சவ்ரவ் தாஸின் குடியுரிமை, அவரது குடும்ப பின்னணி, கடந்த கால செயல்பாடு, பெற்றோர்கள் பற்றி விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அவர் வெளிநாட்டவர் என்று கண்டறியப்பட்டால் அவரது பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை ரத்து செயய வேண்டும். நீதித்துறைக்கு எதிராக அவர் அவதூறாக கருத்துகளை தெரிவித்துள்ளார். இதனால் அவரது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை முடக்க வேண்டும்.

    Advertisement

    இதுதவிர பிற வலைதளங்களில் சவ்ரவ் தாஸ் நீதிமன்றங்கள் உள்பட அரசியலமைப்பின்படி செயல்படும் அமைப்புகள், நீதிபதிகள் பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவிக்காமல் தடுக்கும் வகையில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி ஜெகன்நாத் ஆஜரானார. அப்போது, சவ்ரத் தாஸ் இருக்கும் இடம், முகவரிகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தார். அந்த ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

    Advertisement

    அப்போது சில விவரங்கள் பற்றி நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதுமட்டுமின்றி நீதித்துறைக்கு எதிராக சவ்ரவ் தாஸ் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட விதம் பற்றி கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பாக மனுதாரர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தாரா? என்று கேள்வி கேட்டனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில்,''அக்டோபர் 7 ம் தேதி மத்திய அரசிடம் இதுதொடர்பாக ஏற்னகவே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் தான் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். அந்த மனுவை ஆய்வ செய்து சவ்ரவ் தாஸ்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

    Advertisement

    இதையடுத்து உயர்நீதிமன்றம் சவ்ரவ் தாஸ், மத்திய அரசு மற்றும் பிற எதிர்மனதாரர்களிடம் இருந்து பதில் கோரியுள்ளது. 6 வாரங்களுக்கு பிறகு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அதற்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

    இருப்பினும் சவ்ரவ் தாஸின் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தவோ, அவரது ஆதார், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை ரத்து செய்யவோ, சமூக வலைதள கணக்குகளை முடக்கவோ நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அடுத்தடுத்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

    English Summary

    The Chennai High court issues notice to the Union Home Ministry on a PIL seeking a probe into the nationality of Saurav Das, Co Convenor of the Cockroach Janta Party.