ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ 15 பிடித்தம்! உண்மை என்ன? எஸ்பிஐ வங்கி விளக்கம்

  • சென்னை: ஏடிஎம்மில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேமிப்பு கணக்கு வைத்திருப்போரிடம் ரூ 15, ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் விதியானது மற்ற வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது என பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. இந்த விதி வரும் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது.

    Advertisement

    அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்கு (BSBD) வைத்திருப்போர் ஒவ்வொரு மாதமும் முதல் 4 முறை பணம் எடுப்பது இலவசமாகும். ஆனால் அதற்கு மேல் எடுத்தால் ஒவ்வொரு முறையும் ரூ 15 மற்றும் அதற்கான ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

    Advertisement

    இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: BSBD கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு மாதத்திற்கு வழக்கம் போல் 4 முறை எஸ்பிஐ ஏடிஎம்மில் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம்.

    மாதத்திற்கு 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ 15 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூல் செய்யப்படும். அதே வேளையில் கூகுள் பே, போன் பே, நெட் பேங்கிங் உள்ளிட்ட அனைத்து வகையான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் எந்த வி கட்டுப்பாடு இன்றி தொடர்ந்து இலவசமாகவே செயல்படும்.

    இதனால் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Advertisement

    இந்த அறிவிப்பால் பல எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் எழுந்துள்ளன. இது குறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் கூறியிருப்பதாவது: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம் என தவறான தகவல் பரவி வருகிறது.

    அடிப்படை சேமிப்பு கணக்கு (BSBD) வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த புதிய கட்டண மாற்றம் செல்லுபடியாகும். மற்றபடி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான மாற்றமும் இல்லை. அவர்கள் வழக்கம் போல் மாதம் 5 முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மக்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், வங்கிகளில் கூட்டத்தை குறைக்கவும் இது போன்ற ஒரு நடவடிக்கை எடுக்கப்படுகிறது என எஸ்பிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Advertisement

    அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புக் கணக்கு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு என ஆரம்பித்துவிட்டு அதில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் பணம் பிடிப்பது இந்த கணக்கு தொடங்கப்பட்டதன் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால் BSBD கணக்கு வைத்திருப்போர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    English Summary

    State Bank of India officials clarifies that Rs 15 + GST charged for cash withdrawals beyond 4 transactions. It will be applied only for BSBD account holders.