பேப்பர் - பேனா வாங்க மட்டும் ரூ.3,877 கோடி செலவு! ஸ்டேட் வங்கி முதலிடம்.. டாப் 14 வங்கிகளின் லிஸ்ட்

  • சென்னை: வங்கிகள் டிஜிட்டல் மயமாகிவிட்டதாக நீங்கள் நினைத்தால் அது தவறு. இன்னும் கூட வங்கியில் பேப்பர், பேனா உள்பட ஸ்டேஷனருக்காக பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டு வருகிறது. ஆம் ஸ்டேட் பேஙக், எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பங்க் உள்பட 14 வங்கிகளில் கடந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் பேப்பர், பெண், பெண்சில் உள்பட ஸ்டேஷனரிகளுக்காக ரூ.3,877 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் முதலிடத்தில் ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கி தனது மொத்த லாபத்தில் 1.22 சதவீதமான ரூ.986.4 கோடியை இதற்காக செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கிகளும் எவ்வளவு கோடியை இதற்காக செலவிட்டுள்ளது என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    வங்கிகள் தற்போது டிஜிட்டல் மயமாகி வருகின்றன. நாமும் கூட வங்கிகளுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய தேவையில்லை. ஆன்லைனிலேலேய பெரும்பாலான சேவைகளை பெற்று வருகிறோம். இன்னும் சில ஆண்டுகளில் வங்கிகள் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக வாய்ப்புள்ளது.

    Advertisement

    ஆனாலும் கூட வங்கிகளில் இன்றும் பேப்பர், பெண், பென்சில் உள்பட பிற ஸ்டேஷனரிகளின் பயன்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக பேப்பர் , பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரிகளுக்கு மட்டும் 2025-26ல் 14 வங்கிகள் மொத்தம் ரூ.3,877 கோடியை செலவிட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

    ஆம், இது முற்றிலும் உண்மை. தான். 2025-2026 நிதியாண்டில் பிரிண்டிங் மற்றும் ஸ்டேஷனரிகளுக்காக ஒவ்வொரு வங்கிகளும் செலவிட்ட தொகை பற்றிய விவரத்தை 'குரோ' (Groww) வெளியிட்டுள்ளது. கேஷ் புக், பாஸ்புக், கணக்கு விவரங்களுக்கான அறிக்கைகள், பிற பேப்பர் பயன்பாடு மற்றும் ஸ்டேஷனரிகளுக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு தான் ரூ.3,877 கோடியாகும். எந்தெந்த வங்கிகள் எவ்வளவு பணத்தை செலவிட்டுள்ளன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

    Advertisement

    இந்த பட்டியலில் முதலிடத்தில் ஸ்டேட் பேங்க் உள்ளது. இது பேப்பர், பென் உள்பட ஸ்டேஷனரி பொருட்களுக்காக 2025-26 நிதியாண்டில் மொத்தம் ரூ.986.4 கோடியை செலவழித்துள்ளது. இது வங்கியின் மொத்த லாபத்தில் 1.22 சதவீதமாகும்.

    2வது இடத்தில் எச்டிஎப்சி வங்கி உள்ளது. இந்த வங்கி மொத்தம் ரூ.922.5 கோடியை செலவிட்டுள்ளது. இது வங்கியின் லாபத்தில் 1.26 சதவீதமாகும்.

    3வது இடத்தில் ஆக்சிஸ் வங்கி இருக்கிறது. இந்த வங்கி மொத்தம் ரூ.373.8 கோடியை செலவிட்டுள்ளது. இது வங்கியின் லாபத்தில் 1.33 சதவீதமாகும்.

    4வது இடத்தில் ஐசிஐசிஐ வங்கி இருக்கிறது. இது மொத்தம் ரூ.318.5 கோடியை செலவிட்டுள்ளது. வங்கியின் மொத்த லாபத்தில் இது 0.58 சதவீதமாகும்.

    Advertisement

    5வது இடத்தில் பேங்க் ஆஃப் பரோடா இருக்கிறது. இது ரூ.211.9 கோடியை செலவிட்டுள்ளது. இது வங்கியின் மொத்த லாபத்தில் 1.02 சதவீதமாகும்.

    6வது இடத்தில் பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளது. இது ரூ.173.8 கோடியை செலவிட்டுள்ளது. வங்கியின் மொத்த லாபத்தில் இந்த தொகை என்பது 0.94 சதவீதமாகும்.

    7 வது இடத்தில் கோடக் மஹிந்திரா வங்கி இருக்கிறது. இந்த வங்கி ரூ.167 கோடி செலவிட்டுள்ளது. இது மொத்த லாபத்தில் 0.75 சதவீதமாகும்.

    8வது இடத்தில் கனரா வங்கி உள்ளது. இந்த வங்கி மொத்தம் ரூ.165.9 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த லாபத்தில் 0.94 சதவீதமாகும்.

    Advertisement

    9வது இடத்தில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா இருக்கிறது. இந்த வங்கி ரூ.135.3 கோடியை செலவு செய்துள்ளது. இது வங்கியின் மொத்த லாபத்தில் 0.75 சதவீதமாகும்.

    10வது இடத்தில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி இருக்கிறது. இந்த வங்கி ரூ.122.7 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த லாபத்தில் 8.05 சதவீதமாகும்.

    11வது இடத்தில் இண்டஸ்இண்ட் வங்கி இருக்கிறது. இது ரூ.114.9 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த லாபத்தில் 4.46 சதவீதமாகும்.

    12வது இடத்தில் யெஸ் வங்கி உள்ளது. இது ரூ.70.0 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த லாபத்தில் 2.86 சதவீதமாகும்.

    Advertisement

    13வது இடத்தில் ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி இருக்கிறது. இது ரூ.58.3 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த லாபத்தில் 2.77 சதவீதமாகும்.

    14வது இடத்தில் ஃபெடரல் வங்கி உள்ளது. இது மொத்தம் ரூ.56.2 கோடியை செலவிட்டுள்ளது. இது மொத்த லாபத்தில் 1.33 சதவீதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    It would be a mistake to assume that banks have fully gone digital. They still spend thousands of crores on stationery items, including paper and pens. In fact, 14 banks-including State Bank, HDFC Bank, Axis Bank, and ICICI Bank-spent a total of ₹3,877 crore on stationery (such as paper, pens, and pencils) during the 2025-26 fiscal year alone. State Bank tops the list, having spent ₹986.4 crore-representing 1.22% of its total profit-on these items. Here, we look at the specific amounts spent by each of these banks.