மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.. ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன்

  • சென்னை: அனைத்து ஒப்பந்ததாரர்களையும் நேரில் அழைத்து யாரும் கமிஷன் தரத் தேவையில்லை.. அனைத்துப் பணிகளும் நேர்மையாகவே நடத்தப்பட வேண்டும் எனச் சொன்னவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா என்று புகழ்ந்து பேசியுள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன். மேலும், ஒவ்வொரு மாணவருக்கும் படிப்பிற்கு இணையாக விளையாட்டும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.

    Advertisement

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரியா வில்சன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து பேசினார். விளையாட்டுத் துறையில் மிகப் பெரிய மாற்றம் வரப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

    Advertisement

    அமைச்சர் ராஜ்மோகன்

    இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "ஒரு மாணவனுக்கு வகுப்பறை எவ்வளவு முக்கியமோ.. ஸ்டடீஸ் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஸ்போர்ட்ஸ் கிரவுண்டுன்னு சொன்னார். என்னை நேரில் சந்தித்து இது தொடர்பாக எல்லாத் தரவுகளையும் விளக்கினார். இப்போது தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய அனைத்துப் பள்ளிகளிலும் இருக்கும் மைதானத்தை மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கான விதையை இந்த மனிதர் போட்டு இருக்கிறார். இனி விளையாட்டுத்துறை அமோகமாக இருக்கும்.

    நமது சபாநாயகர் எப்போதுமே மனதளவில் இளமையாக இருப்பவர். மிகச் சிறப்பாக அவையை நடத்தி வருகிறார். இங்கு எம்.ஜி.ஆர். சொன்ன ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். எம்.ஜி.ஆர். சொல்றாரு, எனக்கு மட்டும் ஒரு பெண் குழந்தை இருந்திருந்தால்.. நான் ஜே.சி.டி. பிரபாகருக்கு தான் கட்டிக் கொடுத்திருப்பேன்னு சொன்னார். அப்படிப்பட்ட மனிதர் தான் நமது சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன்.

    Advertisement

    கமிஷன் வேண்டாம் என்றவர்

    வரலாற்றிலேயே பி.டபிள்யூ.டி. மீட்டிங் போட்டு, ஒப்பந்ததாரர்கள் அனைவரையும் அழைத்து, யாரும் எதுக்கும் கமிஷன் தராதீங்கன்னு சொன்ன முதல் அமைச்சர் எங்களுடைய அமைச்சர் தான். எல்லாரும் ஊழலை ஒழிப்போம் ஒழிப்போம்னு அஞ்சு வருஷத்தை ஏமாத்திடுவாங்க. இவர் ஓப்பனிங்லேயே முடிச்சுட்டாரு.. எதுக்கும் காசு கிடையாது.. எல்லாமே வெளிப்படையாக தாந் நடக்கும் என்றவர். அவர் தான் விளையாட்டுத் துறையையும் கவனிக்கிறார். உண்மையிலேயே விளையாட்டுத்துறைக்குக் கிடைத்திருக்கக்கூடிய பொக்கிஷம் தான் ஆதவ் அர்ஜுனா!

    இலவசக் கல்வி

    நிதியமைச்சர் மரிய வில்சன் மாதிரி ஒரு விளையாட்டு வீரரை உங்களால் பார்க்கவே முடியாது. அவரே பெரிய ஸ்போர்ட்ஸ் பிளேயர். மேலும், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கல்விக் கனவை, காசைப் பற்றிக் கவலைப்படாமல் இலவசமாக நிறைவேற்றி வந்து கொண்டு இருக்கிறார். அவரது தொகுதியில் வேலையில்லாமல் இருக்கும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியுள்ளார். பல நூறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும், இலவசமாகக் கல்வி வாய்ப்பையும் தந்திருக்கிறார் அவர். அப்படி இந்த மேடையில் ஒவ்வொருவரும் பெரிய பெரிய ஜாம்பவான்கள்.

    Advertisement

    மாற்றம் வர வேண்டும்

    இந்த மேடைக்கு மேல ஏறி நாங்க பேசுகிற போது, யாருடைய வாழ்க்கையிலாவது ஏதோ ஒரு மாற்றம் வரணும். அந்த சேஞ்ச் வர்றதுக்கான மிகச் சிறந்த டூல் விளையாட்டு. நான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். ஆய்வுக் கூட்டங்கள், மீட்டிங் நடத்திக்கிட்டு நிற்கிற நேரமெல்லாம் ஓடிக்கொண்டே இருப்பேன். ஒரு ஆய்வுக் கூட்டத்தை நானும் விளையாட்டுத் துறை அமைச்சரும் சேர்ந்து நடத்தினோம். அந்த ஆய்வுக் கூட்டத்தின் நோக்கம் என்ன தெரியுமா? தயவுசெய்து பள்ளிகளில் பி.டி. பீரியடைக் கட் பண்ணாதீங்கன்னு அதில் நாங்கள் முடிவெடுத்தோம். பி.டி. பீரியட் இஸ் மஸ்ட். கட் பண்ணக்கூடாது.." என்றார்.

    English Summary

    School Education Minister Rajmohan lauded Sports Minister Aadhav Arjuna for instructing PWD contractors to eliminate commissions (ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்த கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன்): Education Minister Rajmohan Praises Aadhav Arjuna latest news in tamil.