சென்னை: கோவை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். இதே போன்று கோவையிலும் கனமழை எதிரொலியாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் பவன்குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே நாளை திங்கட்கிழமை புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக நாளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தொடர்ச்சியாக இன்று மழை விட்டு விளாசி வருகிறது. தமிழகத்தில் உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் என பரவலாக மழை பெய்து வருகிறது.
நாளையும் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தான் கனமழை முன்னெச்செரிக்கை நவடிக்கையாக புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அமைச்சர் நமச்சிவாயம் இது தொடர்பாக கூறுகையில், நாளையும் புதுவை, காரைக்காலில் கனமழை எச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி நாளை திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதே போன்று கோவையிலும் கனமழை விட்டு விளாசி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை திங்கட்கிழமை விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.பள்ளி, கல்லூரிகள் விடுமுறை
திண்டுக்கல், கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை