நேபாள வெள்ளம்: தலைமை ஆசிரியர் எடுத்த சாதுர்ய முடிவு.. நூழிலையில் தப்பிய 1,643 குழந்தைகள்! ரியல் ஹீரோ

  • காத்மாண்ட்: நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது பள்ளி தலைமை ஆசிரியரின் சாமர்த்தியமான முடிவால், 1,643 பள்ளி சிறார்கள் உயிர் பிழைத்துள்ளனர். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வருவது பற்றிய தகவல் கிடைத்ததும், அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி பத்திரமாக காப்பாற்றிய தலைமை ஆசிரியருக்கு நேபாள மக்கள் பாராட்டு மழை தெரிவித்து வருகிறார்கள்.

    Advertisement

    நேபாளத்தில் கடந்த 26 ஆம் தேதி காலையில் பெருவெள்ளம் ஏற்பட்டது. பனிப்பறைகள் உடைந்து சரிந்ததால் போடோ கோஷி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டு கரையோரங்களில் இருந்த கட்டிடங்கள், பாலங்கள், வீடுகளை வாரி சுருட்டியது.

    Advertisement

    1,643 பேரை காப்பாற்றிய தலைமை ஆசிரியர்

    பனிப்பாறைகள், மணல்கள் சேறு சகதியோடு ஆற்றில் அடித்து வரப்பட்டதால் பெரும் சேதம் ஏற்பட்டது. சம்பவம் நடைபெற்று 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்னும் 2,498 பேரை காணவில்லை. 800க்கும் மேற்பட்டோர் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி மூழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    நேபாளத்தில் ஏற்பட்ட இந்த துயரமான நிகழ்விலும் சிலர் தங்கள் உயிரை பணையம் வைத்தும், சாமர்த்தியமாக யோசித்தும் ஆயிரக்கணக்கானவர்களை காப்பாற்றியுள்ளனர். குறிப்பாக பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த சாதுர்யமான மற்றும் துரிதமான முடிவு 1,643 பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளது. நேபாள மக்கள் மத்தியில் ஹீரோ என பாராட்டப்பட்டு வரும் பள்ளி தலைமை ஆசிரியர் தவாடி அப்படி என்ன செய்தார்? என்ற விவரங்களை பார்க்கலாம்.

    Advertisement

    தலைமை ஆசிரியர் எடுத்த முடிவு

    நேபாளத்தில் திரிபுவன் நகரில் திரிஷுலி உயர் நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. திரிஷுலி பள்ளத்தாக்கு அருகே அமைந்துள்ள இந்த பள்ளியில் 1,643 பள்ளி குழந்தைகள் படித்து வருகிறார்கள். மூன்று மாடிகளில் பள்ளி இயங்கி வருகிறது. நேபாள பெருவெள்ளம் ஏற்பட்ட அன்றைய நாள் காலை 9.20 மணியளவில் தலைமை ஆசிரியர் ராஜேந்திர தவாடியின் நண்பரிடம் இருந்து போன் கால் ஒன்று வந்துள்ளது.

    போனில் அழைத்த அவர், ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு பல இடங்களை நாசம் செய்துள்ளது என்று எச்சரித்துள்ளார். தான் எடுக்க போகிற முடிவில்தான் 1,643 பள்ளி குழந்தைகளின் உயிர் இருக்கிறது என்பதை உணர்ந்த அந்த தலைமை ஆசிரியர் என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறார். பள்ளிக்கூடமோ, ஆற்றின் மட்டத்தில் இருந்து 60 மீட்டர் உயரத்தில் உள்ளது. அதனால் பாதிப்பு ஏற்படாது என முதலில் கருதியுள்ளார்.

    Advertisement

    அடித்து செல்லப்பட்ட பள்ளிக்கூடம்

    ஆனால், ஆற்றின் நீர் மட்டம் அபாயகரமான அளவு உயர்ந்துவிட்டதை அறிந்த பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு பள்ளிக்கு வார்னிங் மெசேஜ்களை அனுப்பியபடி விரைந்துள்ளனர். நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த தலைமை ஆசிரியர் உடனடியாக, பள்ளிக்கு வந்து கொண்டிருந்த பேருந்துகளின் டிரைவர்களை அலர்ட் செய்து திரும்பி செல்லுமாறு கூறியுள்ளார்.

    ஏற்கனவே பள்ளிக்கு வந்துவிட்ட குழந்தைகளை காப்பாற்றியாகவே வேண்டுமே என்பதை அறிந்த அவர், பள்ளிக்கு அருகில் உயரமான இடத்தில் இருந்த போதி மரம் ஒன்றின் கீழ் அமர வைத்தார். சிறிது நேரத்தில் வெள்ள நீர் பள்ளியை அடித்து சென்றது. தவாடியின் துரிதமாக யோசித்து எடுத்த முடிவால் 1,643 குழந்தைகள் உயிர் பிழைத்துள்ளனர்.

    Advertisement

    உள்ளூர் மக்கள் பாராட்டு

    அதே நேரத்தில் பள்ளியில் ஒரு ஆசிரியரும் தூய்மை பணியாளரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்துவிட்டனர். பள்ளி குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்த தலைமை ஆசிரியருக்கு நேபாளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உள்ளூர் மக்களின் பாராட்டு மழையில் நனைத்து வரும் தலைமை ஆசிரியர் தவாடி, இதைத்தவிர தன்னால் வேறு என்ன செய்து இருக்க முடியும்? என்று கூறியுள்ளார்.

    English Summary

    School Headmaster: Thanks to the quick thinking of a school headmaster, 1,643 schoolchildren survived the massive floods in Nepal. The people of Nepal are showering praise on the headmaster for evacuating everyone to safety immediately after receiving news of the surging river waters.