கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு!


  • சென்னை: தமிழகத்​தில் கோடை விடு​முறை முடிந்து அனைத்து வித​மான பள்​ளி​களும் இன்று (ஜூன் 4) முதல் திறக்​கப்பட உள்​ளன. முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருள்களை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்களுக்கு வியாழக்கிழமை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட நலத்திட்ட பொருள்களை மாணவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    Advertisement

    தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 55,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் 1.15 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டில் (2025-2026) இறுதித் தேர்வுகள் முடிந்ததும் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.

    தமிழகத்​தில் இந்​தாண்டு சட்​டசபை தேர்​தல் கடந்த ஏப்​ரல் 23 ஆம் தேதி நடத்​தப்​பட்​டது. இதன் காரண​மாக பள்ளி மாணவர்​களுக்​கான தேர்​வு​கள் வழக்​கத்​தை​விட முன்​கூட்​டியே நடத்தி முடிக்​கப்​பட்​டன. அதன்​படி பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12 ஆம் வகுப்​பு​களுக்கு மார்ச் 2 முதல் ஏப்​ரல் 6 ஆம் தேதி வரை​யும், 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களுக்கு ஏப்​ரல் 1 முதல் 16 ஆம் தேதி வரை​யும் தேர்​வு​கள் நடத்தப்​பட்​டன.

    Advertisement

    இதையடுத்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் மேலும் 3 நாள்கள் பள்ளி திறப்பை பள்ளிக்கல்வித் துறை ஒத்திவைத்தது. அதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது. அதன்படி, பள்ளிகள் இன்று திறக்கப்படவுள்ளன. மாணவர்கள் புதிய உற்சாகத்துடன் பள்ளிக்கு வரவுள்ளனர்.

    முதல் நாளில் மாணவர்​களை வரவேற்​ப​தற்​கான ஏற்​பாடு​களும் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இதுத​விர பள்​ளி​கள் திறக்​கும் முதல் நாளி​லேயே அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பயிலும் மாணவர்​களுக்கு விலையில்லா பாடநூல்​கள், நோட்​டுப் புத்​தகங்​கள், சீருடைகள் போன்​றவற்றை விநியோகம் செய்​வதற்​கான பணி​களும் முடுக்​கி​விடப்​பட்​டுள்​ளன.

    Advertisement

    இதுத​விர புதிய இலவச பேருந்து பயண அட்​டைகள் வழங்​கப்​படும் வரை ஏற்​கெனவே உள்ள பழைய பேருந்து பயண அட்​டையைக் கொண்டு மாணவர்​கள் பயணிக்​கலாம் என்று போக்​கு​வரத்​துத் துறை அறி​வுறுத்​தியுள்​ளது.

    முன்னதாக, ஒரு மாதத்துக்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், குடிநீர், கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், புதிய கல்வியாண்டில் பள்ளிக்கு புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னை எம்எம்டிஏ காலனியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்க்கை பெற்ற மாணவர்களை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்கவுள்ளார்.

    English Summary

    In Tamil Nadu, following the conclusion of the summer holidays, all types of schools are set to reopen today (June 4). Orders have been issued to distribute welfare scheme materials—including free textbooks—to students on the very first day.