பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை! உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாடு! முதல்வர் விஜய் வாழ்த்து!

  • சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், விசிக மாநாட்டையொட்டி உளுந்தூர்பேட்டை நகரத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

    Advertisement

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டில் பெருமளவில் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இந்த நிலையில், மாநாட்டு திடலில் 50 ஆயிரம் மேற்பட்ட நாற்காலிகள், தனித்தனி ஆண்-பெண் அமரும் பகுதிகள், தடுப்புக் கம்பிகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேடை, எல்இடி திரைகள் மற்றும் மின்வசதிகள் அமைக்கும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன.

    விசிக மாநாடு

    தொண்டர்களை திருமாவளவன் நேரடியாக சந்திக்கும் வகையில் நடைபாதை மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டையொட்டி பாதுகாப்புப் பணியில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த உளுந்தூர்பேட்டை பகுதியில் ஆறு இடங்களில் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    Advertisement

    போக்குவரத்து மாற்றம்

    பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வர உள்ளதால், உளுந்தூர்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஆசனூர், எலவனாசூர்கோட்டை, திருக்கோவிலூர் வழியாகவும், சேலம் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் தியாகதுருவம், திருக்கோவிலூர் வழியாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இறுதிக்கட்ட பணிகள்

    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் விக்கிரவாண்டி, விழுப்புரம், மடப்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டு, பண்ருட்டி வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், உளுந்தூர்பேட்டை பகுதியில் மாநாட்டு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    Advertisement

    பள்ளிகளுக்கு விடுமுறை

    இன்று உளுந்தூர்பேட்டை பகுதியில் நடைபெறும் உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாடு முன்னிட்டு பள்ளி மாணவர்களின் நலன் கருதியும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் மாநாடு நடைபெறும் உள்ள இடத்தை சுற்றியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கல்லூரி மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்திட தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பத்மஜா அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்வர் விஜய்

    இதற்கிடையே விசிக மாநாட்டையொட்டி முதல்வர் விஜய் விசிக தலைவர் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடித்தத்தில்," தமிழ் தேசிய சிந்தனை களத்தில் தமிழக வெற்றி கழகம் எங்கள் அரசியல் பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம். இந்த நிலையில் தாங்கள் முன்னெடுத்து வரும் இந்த தமிழ் தேசிய எழுச்சி மாநாடு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    Advertisement

    தமிழர் உரிமை

    தமிழ்மொழியின் பெருமையையும் தமிழர் உரிமைகளின் அவசியத்தையும் தமிழ் தேசியத்தின் தேவையை உண்மை தன்மையுடன் உலகிற்கு எடுத்துரைத்து வரும் தங்களது முயற்சி பாராட்டுக்குரியது. இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் தீர்மானங்கள் மற்றும் செயல் திட்டங்கள் உருவாகிட வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன். இம்மாநாட்டின் முடிவுகள் தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு புதிய திசையை அமைக்கட்டும்" எனக் கூறியுள்ளார்.

    English Summary

    Schools and colleges near Ulundurpet get a one-day holiday as VCK hosts its Tamil Nationalist Conference today.