இடைத்தேர்தல் எப்போ வைப்பாங்க.. வெறியோடு காத்திருக்கேன்! கொதித்த சீமான்

  • சென்னை: தமிழ் என்று உச்சரிக்காதவன்.. தமிழன் என்று உச்சரிக்காதவனிடம் நாட்டை கொடுத்துவிட்டு எங்களை நடுரோட்டில் விட்டுவிட்டியேடா பைத்தியக்காரா.. நடிகனுக்கும் தலைவனுக்கு வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டமே.. திரள்நிதி கூட்டம் என்று என்னை சொன்னீங்க.. இப்படி இவ்வளவு நாளா சொன்னது யாரு திருட்டு நிதிக்காரன்.. இப்போது சொல்கின்ற அயோக்கியப்பய யாரு பிளாக் டிக்கெட் காரன்.. என தவெகவை சீமான் கடுமையாக விமர்சித்து பேசினார்.

    Advertisement

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை பல்லாவரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:- "என்னைக்கு நீயும் நானும் தமிழன்.. என் தாய் மொழி தமிழ் என்று திமிராய் சொல்கிறாயோ அன்றைக்கு இந்த இனம் எழும். விடுதலை அடையும். உன் உள்ளத்தில் எழுதின ஆங்கிலம் மொழி அது அறிவல்ல. அடுத்தவன் மொழி.. இது எப்படி எனக்கு அறிவாகும். பிளாடி நான்ஷன் என நீ என்றைக்கு இதை நினைக்கிறியோ, அன்னைக்கு சரியாகிடும் இந்த நாடு..

    Advertisement

    எல்லா மொழியும் படிப்போம் நாங்கள் வாழ.. எந்தன் மொழி தமிழ் படிப்போம் எங்கள் இனம் வாழ.. மொழி என் முகம், முகவரி, என் கலை, என் இலக்கியம், என் அடையாளம், என் வரலாறு, என் அரசியல், என் உயர் என என்றைக்கு நீ நினைக்கிறாயோ அன்றைக்கு வருமடா உனக்கு மானம், வீரம், ரோசம் எல்லாம்..

    நீ, தமிழ் என்று உச்சரிக்காதவன்.. தமிழன் என்று உச்சரிக்காதவனிடம் நாட்டை கொடுத்துவிட்டு எங்களை நடுரோட்டில் கொண்டு விட்டுவிட்டியேடா பைத்தியக்காரா.. நடிகனுக்கும் தலைவனுக்கு வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டமே.. தலைவன் யாருடா.. எம் தலைவண்டா.. எங்களுக்கு எல்லாம் ஒரு பெருமிதமும், ஒரு திமிறும் இருக்குதுடா.. என்னடா எங்களை பேச முடியும்.. புறம் பேசுவ.. பொய்களை பரப்புவ.. பொய்களை கட்டமைப்பாய்.. வேறு என்ன பேச முடியும்..

    Advertisement

    திரள்நிதி திருடன் என சொல்வ.. திரள்நிதி திருடன் என இவ்வளவு நாள் சொன்னது யார்? திருட்டு நிதிக்காரன்.. இப்ப சொல்கின்ற அயோக்கிய பய யாரு? பிளாக் டிக்கெட் விற்பனை செஞ்சவங்க.. கள்ளச்சந்தையில் கள்ள டிக்கெட் விற்ற அயோக்கிய பயல்கள் எங்களை பார்த்து திரள்நிதி என சொல்வதா.. அயோக்கிய பயலுகளே.. பிளாடி நான்சன்.. தம்பி ஆட்டம் மாறி மாறி தான் ஆடுவோம். இந்த ஆட்டம் உங்க கையில இருக்கு. உங்க காலில் இருக்கிற பந்து ஒரு நாள் எங்கள் கால்களுக்கு வரும். இடைத்தேர்தலுக்காக நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்.. வெறியோடு இருக்கிறேன்..
    நான் என்ன கோவணம் கட்டிக்கொண்டு இருக்க வேண்டுமா? கார் வாங்கக்கூடாதா? நாங்கள் இன்னும் களத்திற்கே வரவில்லை, வந்தால் நீங்கள் என்ன ஆவீர்கள்?" இவ்வாறு அவர் பேசினார்.

    English Summary

    Seeman Comdems TVK: You handed over the country to someone who doesn't even utter the word 'Tamil' or identify as a 'Tamilian,' leaving us stranded in the middle of the road—you madman! You bunch of scoundrels who can't distinguish between an actor and a leader... You labeled me a 'Trul-Nidhi' [paid troll]... Who called me that all this time? That 'Thiruttu-Nidhi' [Thief-Nidhi] fellow. And who is the scoundrel saying it now? That 'Black Ticket' guy." — Seeman spoke, fiercely criticizing TVK.