சேயோன் சீமானுக்கு பிறந்தநாள்! நீலாங்கரை வீட்டில் தம்பிகளுக்கு சிக்கன், மட்டன் தடபுடல் விருந்து!

  • சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 60 ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை நீலாங்கரையில உள்ள அவரது வீட்டில் தொண்டர்களுக்கு அசைவ விருந்தளித்தார். பிறந்தநாளுக்கு தொண்டர்கள் ஏராளமானோர் சீமானை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    Advertisement

    நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 60ஆவது பிறந்தநாள் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருக்கு தொண்டர்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    Advertisement

    அது போல் சமூகவலைதளங்களிலும் வாழ்த்துகள் குவிகின்றன. சீமானின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். சீமானுக்கு மலர்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

    அம்பாசமுத்திரத்தில் மாவீரர் நாள்.. வீடு வீடாக இறங்கும் சீமான்! இடைத்தேர்தல் களத்தில் அதிரடி வியூகம்

    வீட்டிற்கு வந்த தொண்டர்களுக்கு சீமான் வீட்டில் தடபுடலான அசைவ விருந்து பரிமாறப்பட்டது. மட்டன் பிரியாணி, தயிர் பச்சடி, சிக்கன் குழம்பு, சிக்கன் 65, இனிப்பு உள்ளிட்டவை தொண்டர்களுக்கு பரிமாறப்பட்டது.

    சீமானின் பிறந்தநாள் இந்த ஆண்டு ஸ்பெஷல், ஏனென்றால் அவருக்கு அண்மையில்தான் ஒரு மகள் பிறந்துள்ளார். எனவே அவர் வீட்டு மகாலட்சுமியுடன் இந்த ஆண்டு பிறந்தநாளையும் தீபாவளியையும் கொண்டாடி மகிழ்ந்தார்.

    Advertisement

    சீமான் பிறந்தநாளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். அவர்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: சினிமா என்றால்
    கையூன்றிக் கரணமிட்டு,
    தானே கற்றுத் தகுதி பெறும் பெரு முயற்சி

    மேடைகளில்
    சொலல்வல்லன் எனும்
    சொல்லுக்கு இலக்கணமாய்க்
    கொடி கட்டும் பேரூக்கம்

    அரசியல் எனில்
    எண்ணித் துணிந்த பின்பு
    கொண்டதே கொள்கையென
    மாறாப் பேருறுதி

    இப்படி இக்கணத்தில்
    எல்லா இலக்கணத்தில்
    பொருந்தி வாழும்
    என் சகோதரர்,
    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
    சீமானுக்கு
    இன்று பிறந்தநாள்.

    4 நாட்களாகிவிட்டது.. இடைத்தேர்தல் தோல்விக்கு பின் அலுவலகத்திற்கு கூட வராத சீமான.. தவிக்கும் தம்பிகள்
    Advertisement

    செந்தமிழனுக்கு என் சிந்தை மகிழ் வாழ்த்துகள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பகதாவது: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு.சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

    சகோதரர் திரு.சீமான் அவர்கள் நீண்ட ஆயுளோடும், பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை தொடர வேண்டும் என எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அது போல் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தரும், சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.