இடைத்தேர்தலில் கட்டாயம் போட்டியிடணுமா? தயக்கம் காட்டும் தம்பிகள்.. சீமான் எடுக்கும் முடிவு என்ன?

  • சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்க நாம் தமிழர் கட்சியினர் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. 2 தொகுதி இடைத்தேர்தலிலும் நாதக களமிறங்க வேண்டும் என்பதில் சீமான் உறுதியாக இருக்கும் நிலையில், மீண்டும் டெபாசிட் இழப்பது கட்சியினர் மத்தியில் மிகப்பெரிய சோர்வை ஏற்படுத்தும் என்று நிர்வாகிகள் ஆலோசிக்க தொடங்கி இருக்கின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடக்கவுள்ளது. வழக்கமாக தேர்தலில் வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்கும் நாதக இதுவரை தேர்தலில் போட்டியிடுகிறதா என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்களுக்கு முன் திமுக மற்றும் தவெக கட்சிகள் வேட்பாளரை அறிவித்துவிட்டு தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

    Advertisement

    திமுக வேட்பாளராக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் வேட்பாளராக சுகன்யாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் தவெக சார்பாக மரதகம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பாக இவர்கள் இருவரும் போட்டியிட்டு பதவியை ராஜினாமா செய்த காரணத்தினால் மட்டுமே இடைத்தேர்தல் வந்துள்ளது.

    இந்த இடைத்தேர்தலில் நாதக களமிறங்க வேண்டும் என்பதில் சீமான் தீவிரமாக இருக்கிறார். ஆனால் நாம் தமிழர் கட்சியின் சீனியர்களோ அந்த எண்ணத்திலேயே இல்லை. நாதகவில் முதலில் மறுசீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துவோம் என்று பேசி வருகின்றனர். சட்டசபைத் தேர்தலில் இரு தொகுதிகளிலும் நாதக சொல்லிக் கொள்ளும்படியாக கூட வாக்குகளை பெறவில்லை.

    Advertisement

    இதனால் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துவிட்டோ அல்லது தேர்தலையோ புறக்கணிக்கலாம் என்று கூறி இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சட்டசபைத் தேர்தலிலேயே ஒன்றில் கூட டெபாசிட் வாங்க முடியவில்லை. தற்போது இடைத்தேர்தலிலும் மீண்டும் தோல்வி அடைந்தால், அது நிர்வாகிகளுக்கு சோர்வை ஏற்படுத்திவிடும்.

    இடைத்தேர்தலுக்கான பணம் செலவு மற்றும் உழைப்பு அதிகமாக இருக்கும். அதனை உடனடியாக யாராலும் தாங்க முடியாது என்று கூறி இருக்கின்றனர். ஆனால் சீமானுக்கு நெருக்கமானவர்கள், இடைத்தேர்தலில் நாம் களமிறங்குகிறோம். அதற்கான பணிகளை தொடங்குங்கள் என்று தெரிவித்து இருக்கிறார். இதனால் நாதகவினர் என்ன பேசுவது என்று தெரியாமல் கவலையில் இருக்கின்றனர்.

    English Summary

    Seeman: NTK Cadres Hesitant to Contest Madurantakam and Dharapuram Bypolls Despite Seeman Push