பிரஸ்மீட்டை குறைத்த சீமான்.. நடிப்பு + பார்ட் டைம் பாலிட்டிக்ஸ்.. சோகத்தில் நாம் தமிழர் தம்பிகள்!

  • சென்னை: சட்டசபைத் தேர்தலில் தவெக அடைந்த வெற்றிக்கு பின் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். குறிப்பாக பிரஸ் மீட்டை தவிர்க்கும் சீமான், மேடை பேச்சுகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் அடுத்த சில ஆண்டுகளுக்கு நடினாகவும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்று தீவிரமாக இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளது.

    Advertisement

    சட்டசபைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்கவில்லை. காரைக்குடியில் போட்டியிட்ட சீமான், டெபாசிட் கூட வாங்காமல் தோல்வி அடைந்தார். இதனால் அந்தக் கட்சியினர் கடந்த 4 மாதங்காளாகவே உற்சாகமின்றி இருக்கின்றனர்.

    Advertisement

    சாட்டை துரைமுருகன் மற்றும் இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் மட்டுமே விவாதங்களில் பங்கேற்று பேசி வருகின்றனர். இதனிடையே அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சீமான் தீவிரமாக இருக்கிறார். ஏற்கனவே நாதக இடைத்தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டாலும், பொது வேட்பாளராக சீமான் இறங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    அதற்காக சீமான் பல்வேறு கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். ஆனால் திமுக, அதிமுக மட்டும் இன்னும் பிடி கொடுக்காமல் இருக்கிறது. அதேபோல் சீமான் கடந்த சில ஆண்டுகளாக கடைபிடித்து வந்த நடவடிக்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளார். கிட்டத்தட்ட விஜய்யின் பாலிசியை பின்பற்றி இருப்பதாகவே தெரிகிறது.

    Advertisement

    முன்பெல்லாம் சீமான் செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். அதன் மூலமாக பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார் என்று சொல்லலாம். தற்போது தவெக ஆட்சி அமைத்த பின், செய்தியாளர்களை மைக்கை நீட்டினாலும் சிரிப்புடன் கடந்து செல்வதை வழக்கமாக மாற்றி இருக்கிறார். இன்னொரு பக்கம் அறிக்கை மட்டுமே சீமானின் பதிலாக வெளி வரத் தொடங்கி இருக்கிறது.

    அதேபோல் இளைஞர்களிடம் செல்லும் வகையில் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வர திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே LIK படத்தில் சீமான் நடித்த கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்திருந்தது. தற்போது சாந்தனு நடிக்கும் படத்தில் சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதனால் இனி பார்ட் டைம் அரசியல்வாதியாக வலம் வர வேண்டும் என்பதே சீமானின் திட்டமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் நாதக தம்பிகள் சோகம் அடைந்துள்ளனர்.

    English Summary

    Seeman: NTK Leader Seeman Avoids Press Conferences, Focuses on Rallies and Acting Comeback