முத்துக்கு முத்தாக.. சம்பவ இடத்தை நெருங்கிய நாதக! தம்பி உதயநிதி! டோனை மாற்றும் சீமான்! அதே தானா?

  • சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ஆட்சி மட்டுமல்ல காட்சிகளும் மாறி வருகிறது. அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்த திமுக அதிமுக கூட கூட்டணி அமைக்க பேசியதாக வெளியான தகவல் தமிழக அரசியல் களத்தை அதிர வைத்தது. அந்த வகையில் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் மிகக் கடுமையாக விமர்சித்து வந்த திமுகவும் நாம் தமிழர் கட்சியும் அண்மைக்காலமாக மென்மையான அணுகுமுறையை கடைபிடித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    Advertisement

    நேரடியாகவே திமுக தலைவர்களுடன் சந்திப்பு, திருமண விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என சீமான் திமுக தரப்பு இடையேயான தொடர்பு அதிகரித்து வருவதாகவும் சொல்கின்றனர் தம்பிகள். இதனால் சமூக வலைதளங்களில் குரல் வலிக்க திமுகவை விமர்சித்த தம்பிகள் தற்போது தவெக பக்கம் திரும்பியுள்ளனர்.

    Advertisement

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்பது போல் தான் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்த வரை இதுவரை தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொள்ளாத கட்சிகள் என்றால் அது திமுகவும் அதிமுகவும் தான்..

    தமிழக அரசியல்

    இந்த இரு கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகள் இந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கின்றன. காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் திமுக உடனும் அதிமுகவுடன் கடந்த காலங்களில் கூட்டணி வைத்திருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த கட்சி உடனும் கூட்டணி வைக்காத ஒரே கட்சி என்றால் அது நாம் தமிழர் கட்சி தான். சீமான் தொடங்கிய இந்த கட்சி பல தேர்தலில் படுதோல்வியை சந்தித்தாலும் தற்போது வரை தனித்து களம் கண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழகம்

    தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டி விட்டாலும் தேர்தலுக்குப் பிறகு கூட்டணி அமைத்து இருப்பதையும் கவனிக்க வேண்டும். அதே நேரத்தில் எந்த கட்சியை விமர்சிக்கிறாரோ இல்லையோ சீமான் திமுகவை மிகக் கடுமையாக விமர்சிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் ஏன் சில சமயங்களில் தனிப்பட்ட ரீதியாகவும் திமுகவையும் அதன் தலைவர்களையும் விளாசி எடுத்திருக்கிறார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு சீமானின் அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது.

    சீமான்

    திருமண விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள் என சீமான் திமுக தலைவர்களுடன் ஒன்றாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக 2026 தமிழக சட்டசபை தேர்தலில் முடிவுகளுக்கு பிறகு சீமானுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாய்மாமன் சீர்கொண்டு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தது நாம் தமிழர் கட்சியினரை நெகிழ வைத்தது. அதற்குப் பிறகு இயக்குனர் கவுதமன் இல்ல திருமண நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினும் சீமானும் கலந்து கொண்ட நிலையில் இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்து பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

    Advertisement

    உதயநிதி ஸ்டாலின்

    அதன்பிறகு துறைமுகம் சுஜாதா இல்ல திருமண நிகழ்வில் சீமானும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு கட்டி அணைத்து கைகுலுக்கிய காட்சிகள் ஒரு வாரத்துக்கு ட்ரெண்டிங்கில் இருந்தது. இது ஒருபுறம் அரசியல் நாகரீகம் என்று சொன்னாலும் இரு கட்சிகளுக்கு இடையே சமீபகாலமாக ஒரு அரசியல் புரிதல் உருவாகி வருவதாகவே சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். சீமான் திமுக தலைமையை கடுமையாக விமர்சித்தாலும் சீமானை எப்போதும் திமுக தலைமை தனிப்பட்ட விரோதத்துடன் பார்த்ததில்லை என்கின்றனர் திமுகவினர்.

    முக ஸ்டாலின்

    சீமானின் குடும்பத்தில் ஒரு சில நேரங்களில் சோக நிகழ்வுகள் நடைபெற்ற போது நேரடியாகவே பேசி இருக்கிறார் முக ஸ்டாலின். ஸ்டாலின் வீட்டுக்கும் அடிக்கடி நாம் தமிழர் சீமான் நேரில் சென்று இருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் இருந்த பல கட்சிகள் வேறு வேறு அணிகளுக்கு சென்று விட்டன. குறிப்பாக தமிழக வெற்றி கழகம் திமுக கூட்டணியை கிட்டத்தட்ட முற்றிலும் உடைத்து விட்டது.

    Advertisement

    நாம் தமிழர் கட்சி

    இந்த நிலையில் இளைஞர்களின் ஆதரவை பெருமளவில் வைத்திருக்கும் நாம் தமிழர் கட்சி உடன் தேவையற்ற மோதலை கடைபிடிப்பதை விட அரசியல் ரீதியாக ஒன்றாக பயணிக்கலாம் என்ற முடிவுக்கு திமுக தலைமை வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது வரை சீமான் சட்டமன்றத்தை அலங்கரிக்காத நிலையில் வரும் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்த்து நிற்க வலுவான வேட்பாளர்கள் தேவை என்பதுதான் திமுகவின் திட்டம்.

    முதல்வர் விஜய்

    அதனால் பொது வேட்பாளராக சீமானை களமிறக்கலாம். அப்படி களமிறங்கினால் புள்ளி விவரங்களுடன் சட்டமன்றத்தில் விஜயை அதிரவிடலாம் என்பது தான் திமுகவின் எண்ணமாம். அதேபோல் கள அரசியல் எதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்றால் கூட்டணி அவசியம் தற்போதைய அரசியல் எதிரியான தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்க்க திமுகவும் நாம் தமிழர் கைகோர்த்தால் மிகப்பெரிய மாற்றங்கள் நிகழும்.

    Advertisement

    நாம் தமிழர் தம்பிகள்

    கட்சியின் வளர்ச்சிக்காக சீமான் சட்டமன்றத்திற்குள் செல்ல வேண்டும் அதற்கான அரசியல் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சியில் இருந்தும் சில குரல்கள் எழத் தொடங்கி இருக்கிறது. இதெல்லாம் நடக்குமா என்ற கேள்வி எழலாம். இதற்கு முன்னர் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்த நாம் தமிழர் தம்பிகள் கடந்த சில தினங்களாக மென்மையான போக்கை கடைபிடிப்பதை பார்த்தாலே உண்மை புரியும்...

    English Summary

    Seeman's recent interactions with DMK leaders have triggered fresh political speculation over changing equations in Tamil Nadu politics.