மோனோபோலி என திட்டிய அதே சீமான்.. சன் பிக்சர்ஸுக்கு திடீர் புகழாரம்! எல்லாம் ரஜினிக்காகதான்!

  • சென்னை: திராவிட கட்சிகள்தான் தங்களுடைய எதிரி என்றும், சன் பிக்சர்ஸ் திரைத்துறையில் மோனாபோலியாக இருக்கிறது என்றும் விமர்சித்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென சன் பிக்சர்ஸை பாராட்டியிருப்பது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

    Advertisement

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் பரவலாக வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு ஆதரவாக சீமான் அறிக்கை விட்டிருக்கிறார்.

    Advertisement

    அதில் அவர் கூறியிருப்பதாவது, "தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாகத் திகழும் ஐயா ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியுள்ள 'ஜெயிலர் 2' திரைப்படம், ரசிகர்களின் பேரன்பையும் பெரும் வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

    நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்னும், தனது முதல் திரைப்படத்தில் எத்தகைய ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் நடித்தாரோ, அதே ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் இன்றளவும் ஒவ்வொரு படைப்பிலும் காட்டும் அர்ப்பணிப்புதான் அவரது தொடர் வெற்றிப் பயணத்தின் அடிப்படை; தலைமுறைகள் கடந்தும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் ஈர்ப்பின் முதற்காரணம்!

    புகழின் உச்சத்தை அடைந்த பின்னரும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடனும் இணைந்து நடித்த பின்னரும், ஒவ்வொரு திரைப்படத்தையும் புதிய தொடக்கமாகக் கருதி உழைப்பதால்தான் காலங்கள் மாறினாலும், திரைமொழியும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட அன்புப்பிணைப்பு 'ஜெயிலர் 2' வெற்றி வரை மேலும் வலுப்பெற்று வருகிறது.

    Advertisement

    'ஜெயிலர் 2' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்காக ஐயா ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குநர் அன்புத்தம்பி நெல்சன் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அன்புத்தம்பி அனிருத் ரவிச்சந்திரன் அவர்களுக்கும் இப்படத்தைத் தயாரித்த 'சன் பிக்சர்ஸ்' நிறுவனத்தார் மற்றும் திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என இப்படைப்பின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.

    சன் பிக்சர்ஸை கடுமையாக எதிர்த்து வந்த சீமான், இப்போது ரஜினி எனும் ஒற்றை நபருக்காக திடீரென மாற்றி பேசுவது ஏன்? என பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருக்கின்றனர்.

    English Summary

    Seeman: Seeman, the chief coordinator of the Naam Tamilar Katchi—who has long criticized Dravidian parties as his adversaries and denounced Sun Pictures for maintaining a monopoly in the film industry—has suddenly offered praise for Sun Pictures, a move that has drawn significant attention.