என்னாது நான் பேசுறது போர் அடிக்கிறதா? ஆதவ் முன்பே தவெக எம்எல்ஏவிடம் கொந்தளித்த சேகர்பாபு!

  • சென்னை: "நான் பேசுறது என்ன போர் அடிக்கிறதா?" என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தவெக எம்எல்ஏ விஜய் தாமுவிடம் கொந்தளித்தார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்த சேகர்பாபுவும், மேயர் பிரியாவும் அரசியல் நாகரீகம் கருதி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு கைகுலுக்கியும் வணக்கம் கூறியும் நட்பு பாராட்டினர்.

    Advertisement

    சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, விஜய் பாலாஜி, ராயபுரம் தவெக எம்எல்ஏ விஜய் தாமு, துறைமுகம் திமுக எம்எல்ஏ சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Advertisement

    இந்த கூட்டத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அதை எதிர்கொள்ளும் பொருட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    விஜய் விட மாட்டார் போலயே.. காலையில் ஆ.ராசா, சேகர்பாபு! மாலையில் வசந்த கார்த்திகேயன்! பாய்ந்த வழக்கு!

    அப்போது முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசும் போது மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது என பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் அமர்ந்திருந்த தவெக எம்எல்ஏ விஜய் தாமு, "போர் அடிக்கிறது, சீக்கிரம் பேசி முடிங்க" என சொல்லியதாக தெரிகிறது.

    Advertisement

    போர் அடிக்கிறதா?

    இதனால் ஆத்திரமடைந்த சேகர்பாபு, "உனக்கு போர் அடிக்கிறது என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்? நான் அனாவசியமாகவா பேசிக் கொண்டிருக்கிறேன்?" என கேட்டார். அப்போது அருகே அமர்ந்திருந்த அமைச்சர் விஜய் பாலாஜி, சேகர்பாபுவை சமாதானம் செய்தார்.

    ஜனநாயக முறை

    இதையடுத்து சேகர்பாபு மேலும் பேசுகையில், "நாங்கள் இந்த கூட்டத்தில் எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. ஜனநாயக முறையில் எங்களை இந்த கூட்டத்திற்கு அழைத்த நிலையில் நாங்களும் ஜனநாயக அடிப்படையில் நடந்து கொண்டோம். நான் சென்னையைச் சேர்ந்தவன்தான், 5 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளேன்.

    உள்ளாட்சி தேர்தல்

    உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கிறேன். சிறு வயது முதலே துறைமுகம் தொகுதியில் இருக்கிறேன். இவை எல்லாமே அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு நன்றாக தெரியும். இந்தெந்த பணிகளை செய்தால் வெள்ளத்தை சமாளிக்கலாம் என்றுதான் சொல்கிறோம். தற்போது எல் நினோ என்பதால் வரும் பருவமழை இயல்பை விட அதிகமாகவே பெய்யும் என்றும் அடுத்த ஆண்டு அதிக வெப்பமடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அதற்கேற்ப நாம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.

    Advertisement
    மொத்தமாக மாறிய மேயர் பிரியா.. கேமராவை பார்த்ததுமே ஒரே வெட்கம்.. அசந்து பார்த்த சென்னை

    விஜய் தாமு

    இதுகுறித்து விஜய் தாமுவிடம் கேட்ட போது "நான் சேகர்பாபு பேசுவது போர் அடிக்கிறது என்றெல்லாம் சொல்லவில்லை. நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தார். இன்னும் நேரம் வேண்டும் என கேட்டார். அவ்வளவுதான் நடந்தது" என்றார்.

    முகத்தை திருப்பிய மேயர் பிரியா

    இந்த நிகழ்ச்சிக்கு சேகர்பாபுவும், மேயர் பிரியாவும் வந்தபோது அனைவரும் எழுந்து நின்றனர். அப்போது சேகர்பாபுவுக்கு ஆதவ் அர்ஜுனா கைகொடுத்து வரவேற்றார். பிரியாவுக்கு வணக்கம் கூறி வரவேற்றார். அது போல் அங்கிருந்தவர்களுக்கு சேகர்பாபுவும், பிரியாவும் வணக்கம் தெரிவித்தனர். ஆனால் திருவிக நகர் தொகுதி எம்எல்ஏ பல்லவியும், மேயர் பிரியாவும் பேசிக் கொள்ளவில்லை. இருவருமே ஆளாளுக்கு ஒரு பக்கம் திரும்பி கொண்டனர்.

    Advertisement

    ஜூன் மாதம்

    கடந்த ஜூன் மாதம் பள்ளிக் கட்டடத் திறப்பு விழாவில் குத்து விளக்கை தன்னிடம் கொடுக்கவில்லை என பல்லவி எம்எல்ஏ, மேயர் பிரியா மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவத்தின் போது இருவருக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.