கோட்டை விட்ட மாநகராட்சி.. மூழ்கும் நிலையில் HRCE ஆபீஸ்! யார் பொறுப்பு.. பாயிண்டோடு வந்த சேகர் பாபு!

  • சென்னை: சென்னை மாநகராட்சியைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியமும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தன் சொந்த அலுவலக வளாகத்திலேயே மழைநீர் தேங்கியுள்ளதற்கு ஆணையர் யாரிடம் விளக்கம் கேட்கப் போகிறார்? ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்ய வேண்டும்! என முன்னாள் அமைச்சர் சேகர் பாபு கேள்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில், இதைவிடப் பெருமழை பெய்த காலங்களில்கூட இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் இவ்வாறு மழைநீர் தேங்கியதில்லை!

    Advertisement

    சென்னை மாநகராட்சி நிர்வாகம் உறக்கத்தில் இருப்பதாக மக்கள் கேள்வி எழுப்பும் நிலையில், இந்து சமய அறநிலையத்துறையும் அதே அலட்சியப் போக்கில் செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது. அனைத்து விவகாரங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி விளக்கம் கேட்கும் ஆணையர், தனது அலுவலக வளாகத்திலேயே மழைநீர் தேங்கியிருப்பதற்கு யாரிடம் விளக்கம் கேட்கப் போகிறார்?

    சென்னையைச் சுத்துப் போடும் மேகங்கள்.. அலறிய செல்போன்கள்! ராத்திரி மெகா சம்பவம்! விரைந்த என்டிஆர்எஃப்

    கோயில்களின் நிர்வாகம், சொத்துப் பாதுகாப்பு, பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களைப் பாதுகாப்பது எனப் பல முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட துறையின் அலுவலகத்திலேயே மழைநீர் தேங்குவது கவலைக்குரியது. நீர் உட்புகும் அபாயம் இருந்தால், நூலகங்களிலும் ஓலைச்சுவடிப் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் உள்ள அரிய ஆவணங்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

    Advertisement
    சென்னை வரலாற்றில் இதுவரை அப்படி நடந்ததில்லை! இன்று நடக்குமா? வெதர்மேன்

    வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிப்புகள் வெளியிடப்படும் நிலையில், நடைமுறையில் இத்தகைய நிலை ஏன் ஏற்பட்டது? வடிகால் வசதிகள் முறையாகப் பராமரிக்கப்பட்டனவா? மழைநீர் தேங்குவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா?

    அறிவிப்புகளும் சுற்றறிக்கைகளும் மட்டும் நிர்வாகமல்ல; களத்தில் தெரியும் செயல்பாடுகளே நிர்வாகத்தின் அளவுகோல்! மழைநீர் தேங்கியதற்கான காரணம் என்ன, பொறுப்பான அதிகாரிகள் யார், அரிய ஆவணங்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பவை குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இனியும் இதுபோன்ற அலட்சியம் நிகழாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்." என கூறியுள்ளார்.

    Advertisement

    மழைநீர் தேங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், அதை விரைவாக வெளியேற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு, தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் குறிப்பிட்டுத் தான் சேகர் பாபு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    English Summary

    Former minister Sekar Babu questions rainwater stagnation at Chennai’s HRCE office and urges protection of rare documents and palm-leaf manuscripts.