எல்லாம் போச்சு.. அதோட மதிப்பு தெரியுமா உங்களுக்கு! அமைச்சர் ரமேஷை விளாசிய ’மாஜி’ சேகர் பாபு

  • சென்னை: இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்து, அரிய ஆவணங்கள் சேதமடைந்துள்ளன எனவும், 2024-ஆம் ஆண்டு மழை, வெள்ளம் உள்ளிட்ட சூழல்களிலும் கட்டிடத்துக்குள் தண்ணீர் புகாத நிலையில், தற்போது அலுவலகத்திற்குள்ளேயே தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டிருப்பது ஏன்? என முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கேல்வி எழுப்பியுள்ளார்.

    Advertisement

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாததால், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக கட்டிடத்திற்குள் மழைநீர் புகுந்து, அரிய ஆவணங்கள், கோப்புகள் மற்றும் சுமார் ரூ.30,000 மதிப்பிலான புத்தகங்கள் சேதமடைந்துள்ளன.

    Advertisement

    மேலும், நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் "ரூ.400 கோடி நிதி இல்லை" என்று கூறும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் அவர்களிடம் ஒரு கேள்வி! கடந்த திராவிட மாடல் ஆட்சியில் 4,649 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டது எப்படி?

    நாங்கள் அறிவித்துத் தொடங்கிய திருப்பணிகள் நிறைவடையும் நிலையில் இருந்த கோயில்களில் இன்று குடமுழுக்குகள் நடைபெறுவது எப்படி? மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் குடமுழுக்குப் பணிகளே இதற்குச் சாட்சி! அறம் சார்ந்த பணிகளில், பள்ளிகள், கல்லூரிகள் முதல் மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள் வரை, முறையான நிதி மேலாண்மையுடன் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து, இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் பல மைல்கற்களைப் பதித்துள்ளோம்!

    Advertisement
    எங்களை பகைக்க வேண்டும்.. CM விஜய் மீது வெறுப்பு வந்துரும்! சொத்து கணக்கை காட்ட ஆசிரியர்கள் எதிர்ப்பு

    நாங்கள் ஏற்றிய அறப்பணிகளின் விளக்கை மறைக்க நினைப்பவர்களுக்கு, ஆயிரம் விளக்குகள் ஏற்றினாலும் உண்மை இருட்டாகவே தெரியும்! அமைச்சருக்கு இந்த விவரங்கள் தெரியவில்லை என்றால், தனது துறையின் அதிகாரிகளிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்! துறைச் செயலாளர், ஆணையாளர், கூடுதல் ஆணையாளர், இணை ஆணையர்கள் வரை, திருக்கோயில் திருப்பணிகளுக்கான நிதி ஆதாரங்களைத் திட்டமிடுவதிலும், அவற்றைச் செயல்படுத்துவதிலும் எங்களுடன் இணைந்து பணியாற்றிய அதே அதிகாரிகள்தான் இன்றும் துறையில் உள்ளனர்.

    Magalir urimai thogai: மகளிருக்கு மாதம் ரூ.2,500 எப்போது கிடைக்கும்? விஜய் திட்டம் என்ன? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில்
    Advertisement

    அவர்களிடம் கேட்டாலே கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், நிதி ஏற்பாடுகள், பணிகளின் முன்னேற்றம் என அனைத்தையும் அறிந்துகொள்ளலாம்! திருக்கோயில்களின் வருவாயைப் பெருக்கும் நோக்கில், பயன்பாட்டில் இல்லாத பலமாற்றுப் பொன் இனங்களைச் சுத்தத் தங்கக் கட்டிகளாக மாற்றி, ஒன்றிய அரசின் வங்கிகளில் முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு கோயில்களின் அடிப்படை வசதிகளையும் மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொண்டோம்.

    Protocol பார்க்காமல் மேயர் பிரியா தாராளமாக வரலாமே! அமைச்சர் ராஜ்மோகன்

    குறிப்பாக, 25 திருக்கோயில்களிலிருந்து திருக்கோயில்களுக்குப் பயனில்லாத 1,111 கிலோ பலமாற்றுப் பொன் இனங்களைச் சுத்தத் தங்கக் கட்டிகளாக மாற்றி, ரூ.836 கோடி தங்க வைப்புநிதியாக வைத்து, ஆண்டுக்கு ரூ.18 கோடி வட்டி வருவாய் கிடைத்து வருகிறது. மேலும், 9 கோயில்களின் 296 கிலோ தங்கத்தையும் சேர்த்தால், ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கும் மேல் வருவாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான திருக்கோயில்களின் பண்பாட்டு மரபைப் பாதுகாத்து, திருப்பணிகளுக்கும் வருவாய் ஈட்டும் திட்டங்களுக்கும் நிதி ஆதாரம் உருவாக்கப்பட்டது.

    Advertisement

    இதற்குச் சான்றாக, இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் முதல் முறையாக குறிப்பிடத்தக்க வகையில், 4 ஆண்டுகளில் ரூ.425 கோடி அரசு நிதி மற்றும் ரூ.135 கோடி திருக்கோயில், உபயதாரர் நிதி என மொத்தம் ரூ.560 கோடி செலவில் 352 திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 96 திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டது! தங்கத்தை உருக்கி வருவாய் ஈட்டும் திட்டம் முதல் திருக்கோயில்களின் திருப்பணிகள் வரை திட்டமிடப்பட்ட நிதி மேலாண்மையே முக்கியம்!

    குன்னூரில் பல அடுக்கு வாகன நிறுத்தத்தை மருதமலை திருக்கோயிலின் நிதி ஆதாரத்தின் மூலம் அமைத்து, அந்த வாகன நிறுத்தத்தின் மூலமாகப் பெறப்படும் வருவாயைச் சுற்றியுள்ள 32-க்கும் மேற்பட்ட வருமானமற்ற சிறிய திருக்கோயில்களின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம் என்று அறிவித்தபோது, அதைத் தேவையற்ற
    திட்டம் என எள்ளிநகையாடியவர்கள், இன்று கொடைக்கானலில் அதேபோன்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

    Advertisement

    அன்று திமுக அறிவித்தபோது தேவையற்ற திட்டம்; இன்று தாங்கள் அறிவிக்கும்போது மக்கள் நலத் திட்டமா? இதுதான் நீங்கள் கூறும் மாற்றமா? மேலும், திராவிட மாடல் ஆட்சிக்கு வந்த பிறகுதான் பழமையான திருக்கோயில் ஆவணங்களையும் ஓலைச்சுவடிகளையும் பாதுகாக்கவும், ஆயிரக்கணக்கான அரிய ஆவணங்களை ஸ்கேன் செய்து கணினிமயமாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டன.

    2024-ஆம் ஆண்டு மழை, வெள்ளம் உள்ளிட்ட சூழல்களிலும் கட்டிடத்துக்குள் தண்ணீர் புகாத நிலையில், தற்போது அலுவலகத்திற்குள்ளேயே தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டிருப்பது ஏன்? இதுகுறித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டாமா? நிதி இல்லை என்று கைவிரிப்பது நிர்வாகத்தின் பதிலாகிவிடாது; நிர்வாகக் குறைபாடுகளுக்குப் பொறுப்பேற்பதே கடமை!

    நாங்கள் உருவாக்கிய நிதி ஆதாரங்கள், தொடங்கிய திருப்பணிகள், பாதுகாத்த பண்பாட்டு மரபுகள் - இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் சான்றுகள். அவற்றைத் தொடர்வதும், மக்களுக்குக் கணக்குச் சொல்வதும் தற்போதைய அரசின் பொறுப்பு! குறைபாடுகளைக் களைந்து, நிதியை முறையாக நிர்வகித்து, பணிகளை நிறைவேற்றி, இறையன்பர்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வதே இந்து சமய அறநிலையத்துறையின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்." என கூறியுள்ளார்.

    English Summary

    Former minister Sekar Babu criticizes Tamil Nadu’s HR&CE department after rainwater reportedly damages rare records, files and books worth ₹30,000.