ராணுவத்தால அழிந்தவர்களை விட.. ஆணவத்தால் அழிந்தவர்கள் அதிகம்! சாத்தான் ஆட்சி.. மாஜி சேகர்பாபு விளாசல்

  • சென்னை: மீனாட்சியம்மன் கோவில் வீரவசந்த ராயர் மண்டபம் திறக்கப்பட்டதற்கு உரிய சொந்தம் கொண்டாட வேண்டிய அரசு திமுக அரசு எனவும், ஒரு ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருக்க வேண்டுமே தவிர சாத்தான்கள் ஆட்சியாக இருக்கக் கூடாது, ராணுவத்தால் அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்களை அதிகம் என்பதை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன் என அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதில்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரில் துறைரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய நிகழ்வில் பங்கேற்பதற்காக சட்டசபைக்கு வந்தார் முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சேகர் பாபு

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," செப்டம்பர் 17ஆம் தேதி 6000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க அங்கயற்கரசி என்று போற்றப்படும் மீனாட்சி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    சேகர்பாபு

    இந்த குடமுழுக்கு தேதியை நிர்ணயித்த அரசு திமுக அரசு. நேற்று 79 கல் தூண்கள் வீர வசந்தராயர் மண்டபம் 8 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு வாசல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய சொந்தம் கொண்டாட வேண்டிய அரசு திராவிட மாடல் அரசு. கடந்த ஆட்சியில் கல் தூணை தேர்வு செய்ய அமைச்சர் என்ற முறையில் பத்து முறை நாமக்கல்லுக்கு பயணம் செய்துள்ளோம். முந்தைய காலத்தில் எப்படி கற்கள் இருந்ததோ அதேபோல் பார்த்து பார்த்து செதுக்கிய வீர வசந்தராயர் மண்டபம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருப்பது பெரும் மகிழ்ச்சி.

    Advertisement

    குட முழுக்கு பத்திரிக்கையில் பிழை இருப்பதை நாங்கள் சொன்ன பிறகுதான் நாங்கள் எடுத்துக் கூறிய பிறகுதான் அந்த குடமுழுக்கு பத்திரிக்கையை திருப்பி வெளியிட்டுள்ளார்கள். வருவோர் பெயரை இடம்பெற செய்ய மாட்டோம் என்று சொல்லி உள்ளார்கள். பிடிஆர் குடும்பத்தினர் பல ஆண்டுகள் அறங்காவலர் பணி செய்துள்ளார்கள். அறங்காவலர் குழு தலைவராக இருப்பவர் ருக்மணி பழனிவேல் ராஜன், சுப்புலட்சுமி, மீனாள், இடம்பெற்றுள்ளார்கள். பிகேஎன் செல்லையா அதிக உபயம் செய்துள்ளார்.

    சாத்தான் ஆட்சி

    கைம்பெண்களை திருக்கோவில் அறங்காவலர்களாக எப்படி நியமிக்கலாம் என்று வழக்கு போடப்பட்ட பொழுது நீதிமன்றம் அதற்கு குட்டு வைத்து கைம்பெண்ணை அறங்காவலர் குழு தலைவராக நியமித்தது சமூக நீதி அடிப்படையில் தான். ஒரு ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக இருக்க வேண்டுமே தவிர சாத்தான்கள் ஆட்சியாக இருக்கக் கூடாது. ஒரு சமய நிறுவனத்தின் நிர்வாகம் எந்த அமைப்பிலும் ஒப்படைக்கப்பட்டுள்ளதோ அந்த நபர் அல்லது அந்த அமைப்புதான் அறங்காவலர் என்று சட்டம் சொல்கிறது.

    Advertisement

    அறங்காவலர் குழு

    ஒவ்வொரு மத நிறுவனத்தின் அறங்காவலரும் அறக்கட்டளை விதிமுறை மற்றும் வழக்கத்தை பின்பற்றி நியமிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஒரு சட்டத்தின் ஆட்சி நடக்கும் பொழுது ஏற்கனவே வகுத்துள்ள சட்டத்தின்படி அறங்காவலர் குழுவில் மூன்று பேர் இருந்தால் இரண்டு பேர் இருக்க வேண்டும் அப்போதுதான் செயல் அலுவலர் கூட்டத்தை கூட்ட முடியும். கூட்டத்தை உண்டான அஜெண்டாவை கூட ஒரு வாரத்திற்கு முன் அறங்காவலர் குழுவுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றால் தான் கூட்டம் நடைபெறும்.

    ராணுவத்தால் அழிந்தவர்களை விட..

    சர்வ வல்லமை படைத்த திருக்கோவில் நிர்வாகத்தை அறங்காவலர் பெயர் போடுவதற்கு வருவோர் போவோர் பெயர் போட முடியாது என்று சொல்வது சரியல்ல. ராணுவத்தால் அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம் என்பதை அமைச்சருக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளேன். காஞ்சிபுரம் செம்மஞ்சேரி விளையாட்டு நகரம் சிஎம்டிஏ சார்ந்த பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி பணிகள் அனைத்தையும் முடக்குவது தான் இந்த ஆட்சியின் வழக்கமாக இருக்கிறது. இந்த திட்டத்தை ஏன் ரத்து செய்தீர்கள் என அமைச்சரிடமே கேளுங்கள்." என்றார்.

    English Summary

    DMK MLA Sekarbabu strongly criticised Minister Nirmal Kumar, raising concerns over temple administration and governance.