திமுக பக்கம் நிற்கும் அரசு அதிகாரிகள்.. வார்த்தையைவிட்ட சேகர்பாபு.. ஷாக்கான அமைச்சர் ரமேஷ்!

  • சென்னை: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்களாகிவிட்ட சூழலிலும், அரசு உயர் அதிகாரிகள் பலரும் இன்னும் திமுக முன்னாள் அமைச்சர்களுடன் தொடர்பில் இருப்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. சட்டசபையில் அமைச்சர் ரமேஷ் புதிதாக 106 அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பாகவே, அதனை சேகர்பாபு 106 அறிவிப்புகள் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதேபோல் 7 கோயில்களில் ஆடிட் செய்து பார்த்தும் எதுவும் சிக்கவில்லை என்று சேகர்பாபு சட்டசபையில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைத்த நாள் முதலே அரசு அதிகாரிகள் தனிச்சையாக செயல்பட்டு வருவதாக விமர்சனங்கள் எழுந்தன. அதற்கேற்ப குஜிலியம்பாஸை வட்டாட்சியர் வெளியிட்ட அறிக்கை, மாணவர்களின் போராட்டம் தொடர்பாக கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கை, சட்டசபையில் அமைச்சர்களுக்கு எழுதி கொடுக்கப்படும் பதில்கள் ஆகியவை சாட்சியாகவே அமைந்தன.

    Advertisement

    அதேபோல் தலைமைச் செயலாளரை தவிர்த்து வேறு எந்த அரசு உயர் அதிகாரிகளையும் முதல்வர் விஜய் சந்திப்பதில்லை என்ற பேச்சுகள் அதிகரித்துள்ளன. மறுபக்கம் அமைச்சர்களின் அனுபவமின்மையை புரிந்து கொண்டு, அதிகாரிகள் பலரும் முடிவுகள் எடுப்பதாக கூறப்படுகிறது. சில துறைகளின் அதிகாரிகள் இன்னும் திமுகவுக்கு விஸ்வாசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    நேற்று சட்டசபையில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், நீங்கள் இப்போது 106 அறிவிப்பை வெளியிட இருக்கிறீர்கள். அந்த அறிவிப்புகளை எல்லாம் எத்தனை நாட்களில் நிறைவேற்றப் போகிறீர்கள் என்று பார்ப்போம் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட சபாநாயகர் அமைச்சர் ரமேஷ்க்கு உத்தரவிட்டார்.

    Advertisement

    அப்போது சபாநாயகர், நீங்கள் 1006 அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பாகவே முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எப்படி அதனை சரியாக சொன்னார் என்று யோசிக்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து அமைச்சர் ரமேஷ் பேசுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பாக இந்த பட்ஜெட்டுக்கான அறிவிப்புகளை வெளியிட கடமைப்பட்டுள்ளேன்.

    106 அறிவிப்புகள் இருக்கிறது என்று முன்கூட்டியே புலனாய்வு செய்து தெரிந்து கொண்ட சேகர்பாபுவுக்கு அவர் கேட்ட கல்லூரி தொடர்பான அறிவிப்பும் உள்ளே இருக்கிறது என சொல்லாமல் விட்டுவிட்டார்கள் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 7 கோயில்கள் தொடர்பாக ஆடிட் செய்யபட்டதே என்றும் சேகர்பாபும் பேசி இருந்தார். இதனால் தவெக அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருக்கும் அதிகாரிகள் பலரும் திமுகவுக்கு விஸ்வாசமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது.

    English Summary

    Sekarbabu: TVK Government Bureaucrats Still in Touch With Former DMK Ministers, Sparking Debate