திட்டமிட்டபடி நாளை ஜூன் 4ம் தேதி தமிழக பள்ளிகள் திறக்கப்படும்.. செங்கோட்டையன் முக்கிய தகவல்

  • சென்னை: தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து கடந்த சில நாட்களாகவே பல்வேறு விவாதங்களும் எதிர்பார்ப்புகளும் நிலவி வந்த சூழலில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருந்த இந்த விவகாரத்தில், தமிழக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியான மற்றும் தெளிவான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

    Advertisement

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பு சார்ந்த அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பரபரப்பான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

    Advertisement

    செங்கோட்டையன் அதிரடி

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழக முதலமைச்சரின் உத்தரவின் படி துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் தீவிரமாக ஆய்வு மேற்கொண்டு வருகிறோம், தமிழகத்தில் பருவமழை மற்றும் இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாப்பாகப் பணியாற்றுவதற்கு அரசு இயந்திரமும், சம்பந்தப்பட்ட துறைகளும் மிக வேகமாகச் செயல்பட்டு வருகிறது.

    குறிப்பாக, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ரேடார் தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம், பருவமழை பாதிப்புகளைத் தடுப்பதற்கும், அவசரக் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் தமிழக அரசு 24 மணி நேரமும் முழு தயார் நிலையில் உள்ளது.

    Advertisement

    பள்ளிகள் திறப்பு எப்போது

    இதற்காகத் தமிழகத்தின் 3 முக்கிய இடங்களில் ரேடார் தொழில்நுட்பம் மூலம் தீவிரமாகக் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ள அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. கோடை விடுமுறைக்கு பின் திட்டமிட்டபடி ஜூன் 4தேதி தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல் திறக்கப்படும்" என்றார்.

    அமைச்சரின் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, பள்ளிகளைத் திறப்பதற்கான இறுதி கட்டப் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன.

    மே மாதத்தின் சுட்டெரிக்கும் கோடை வெயில் மற்றும் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்தது. ஜூன் ஒன்றாம் தேதியே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக அறிவித்திருந்தது. ஆனால், வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், பிஞ்சு குழந்தைகளின் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியது.

    Advertisement

    நாளை பள்ளிகள் திறக்கப்படும்

    இதுமட்டுமின்றி, ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், "இந்தக் கடுமையான வெயிலில் பள்ளிகளைத் திறப்பது மாணவர்களுக்குப் பாதுகாப்பானது அல்ல, எனவே திறப்பு தேதியை உடனடியாகத் தள்ளி வைக்க வேண்டும்" என்று அரசுக்குக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

    இதனால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, பள்ளிகள் திறப்பு தேதியில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டது. 1ம் தேதியே பள்ளிகள் திறக்க வேண்டியிருந்த அறிவிப்பு தள்ளி போனது.. இந்நிலையில், நாளை முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிகள் தயார் நிலை

    தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கடந்த சில தினங்களாகவே போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் நடமாடும் பகுதிகள் அனைத்தும் தீவிரமாகத் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

    Advertisement

    அத்துடன், மாணவர்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டிகள் அனைத்தும் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    English Summary

    Sengottaiyan Confirms June 4 Reopening for Tamil Nadu Schools! No Change in Schedule