கர்நாடகவால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது.. விஜய்யின் கனவு திட்டம்.. செங்கோட்டையன் விளக்ம்

  • ஈரோடு: காவிரியின் குறுக்கே மேகாதாது அணை கட்டுவதற்கான முயற்சியில் கர்நாடகா அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நீதிமன்றத்துக்கு சென்று சட்டப் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக, முதலமைச்சர் விஜய் கர்நாடகா சென்று அம்மாநில முதலமைச்சரை சந்திக்கவுள்ளார். இது பெரும் சர்ச்சையாகியுள்ளது. விஜய் கர்நாடகா பயணம் குறித்து செங்கோட்டையன் விளக்கியுள்ளார்.

    Advertisement

    ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் விஜய், கர்நாடகா முதலமைச்சர் சிவக்குமாரை சந்திப்பதற்கு 2 காரணங்கள் உள்ளன. எல்லா முதலமைச்சரும் முதலில் அவர்களின் பிரதிநிதிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அனுப்பினார்கள்.

    Advertisement

    ஒரு செங்கலை கூட வைக்க முடியாது

    அவரோடு சட்டத்துறை அமைச்சர் சண்முகமும் சென்றார். அவர்கள் கேரளாவுக்கும் சென்றார்கள், கர்நாடகாவுக்கும் சென்று முதலமைச்சரிடம் பேசி எங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு பிறகு காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    முதலமைச்சர் இல்லாவிடினும் அவரின் சார்பாக அமைச்சர்கள் பிரநிதிகளாக கடிதம் எடுத்து சென்றுள்ளனர். கர்நாடகா சென்று அங்கிருந்து தொலைபேசி மூலம் ஜெயலலிதா பேசியுள்ளார். முதலமைச்சர் அங்கு செல்வதால் மேகதாது அணை விவகாரத்தில் நமக்கு 100 சதவிகிதம் பின்னடைவு ஏற்படாது. நாம் தமிழகத்தை ஆளும் வரை மேகதாது அணையில் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது. இதுதான் நம்முடைய முதலமைச்சரின் கனவு.

    Advertisement

    குடிநீர் பிரச்சனை

    ஈரோட்டில் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது என்பதை ஆய்வு செய்துள்ளோம். எந்த இடத்தில் நிலத்தடி நீர் உள்ளது என்பதற்கான பணிகள் நடக்கிறது. தேவையான இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத வகையில், சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

    தற்போது 18 மணி நேரம் ஓடும் ஆற்றங்கரை ஓரத்தில் மோட்டார்கள், 22 மணி நேரம் இயங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நேரம் வரும்போது தண்ணீர் வந்து பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும். அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து வருகிறோம். குடிநீருக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்றார்.

    English Summary

    Minister Sengottaiyan said CM Vijay's visit to Karnataka over the Cauvery issue will not weaken Tamil Nadu's stand, asserting that not even a single brick will be laid for the Mekedatu dam.