முதல்வர் விஜய் பட்டு-வேட்டி சட்டை அணிவது ஏன்? செங்கோட்டையன் விளக்கம்

  • சென்னை: முதல்வர் விஜய் பட்டு வேட்டி சட்டையில் வருவது ஏன் என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். பொதுவாக வெள்ளிக்கிழமைகளிலும் நலத்திட்ட தொடக்க விழாக்கள், மற்ற விழாக்களிலும் அவர் பட்டு வேட்டி சட்டையிலேயே வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    Advertisement

    தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தவெக 107 இடங்களில் வென்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்து விஜய் முதல்வரானார். தனது பதவியேற்பு விழாவின் போதே விஜய் கோட் சூட்டில் வந்திருந்தார்.

    Advertisement

    அன்று முதல் சட்டசபைக்கு கோட் சூட்டில் வருவதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
    பதவியேற்றதும் தனது உதவியாளர் ஜெகதீஷ் வீட்டு கிரகபிரவேசத்தில் வெள்ளிக்கிழமை அன்று கலந்து கொள்ள பட்டு வேட்டி சட்டையில் வந்த விஜய், தலைமைச் செயலகத்திற்கும் அதே காஸ்டியூமில் சென்றார்.

    இதையடுத்து விழாவுக்கு சென்றுவிட்டு வந்ததால் அவர் அதே உடையுடன் தலைமைச் செயலகத்திற்கு சென்றுவிட்டார் என கருதப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமைகளில் வேட்டி சட்டையில் வருவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

    அது போல் கோட் சூட்டின் கோட்டை கழற்றி வைத்துவிட்டு வெறும் வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்து கொண்டு தலைமைச் செயலகத்தை சுற்றி பார்த்தார். காவல் துறை நிகழ்ச்சி, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், மதுராந்தகம் தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் வேட்டி சட்டையில் சென்றிருந்தார்.

    Advertisement

    கோட் சூட், பட்டு வேட்டி சட்டைக்கு மத்தியில் மற்ற நிறங்களிலும் அவர் உடை அணிந்து வருவது வழக்கம். சில நேரம் கலர் உடைகளையும் அணிந்திருந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி உடனான சந்திப்பின் போது கருப்பு நிறத்தை போன்ற ஒரு கருநீல சட்டை, பேண்ட் அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

    சென்னை ஐஐடியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய், ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தவெக தொண்டர்கள், "எங்கள் தலைவர் உடையிலேயே அவருடைய எதிர்ப்பை மத்திய அரசுக்கு பதிவு செய்துவிட்டார்" என்றெல்லாம் சமூகவலைதளங்களில் விவாதித்தனர்.

    Advertisement

    இந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறுகையில், முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமை மட்டுமே பட்டு வேட்டி, சட்டையில் வருவார், மற்ற நாட்களில் சாதாரணமாகத்தான் வருவார் என தெரிவித்திருந்தார்.

    கரூரில் நடந்த கூட்டத்தில் முதல்வர் விஜய், தான் ஏன் கோட் சூட் அணிகிறார் என்பது குறித்து விளக்கியிருந்தார். அதில் "கருப்பு வெள்ளை என்பது ஏழைகளின் நிறம். வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும், எளிமையையும் பிரதிபலிக்கிறது. நான் என்ன கலர் கலராகவா கோட் சூட் அணிகிறேன்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

    English Summary

    Minister Sengottaiyan explains why CM Joseph Vijay appears in Silk Dhoti and Shirt.