செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே! அமைச்சர் குஷி

  • சென்னை: அதிமுக என்ற ஒரு கட்சி இனி இருக்கவே இருக்காது என்று அமைச்சரும் அதிமுகவின் முன்னாள் நிர்வாகியான செங்கோட்டையன் கூறியுள்ளது ரத்தத்தின் ரத்தங்களை கொதிப்படையச் செய்துள்ளது. இது சம்பந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி, அதிமுகவுக்கு டென்ஷனை தந்து வரும் நிலையில், அமைச்சர் பாலாஜியிடம் செங்கோட்டையன் ஜாலியாக பேசிய மற்றொரு வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. என்ன நடந்தது?

    Advertisement

    மதுராந்தகம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைவு விழா நடைபெற்றது.. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.

    Advertisement

    செங்கோட்டையன் கடுப்பு பேச்சு

    அப்போது செங்கோட்டையன் பேசும்போது, 42 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்த தன்னை எடப்பாடி பழனிசாமி புறக்கணித்த நிலையில், விஜய் தனக்கு உரிய அங்கீகாரம் வழங்கி அரவணைத்துக் கொண்டதாகவும். பழைய நிர்வாகிகளை மதிக்கத் தவறியதால் தான் அதிமுக தற்போது கடும் வீழ்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

    எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பேசிய செங்கோட்டையன், மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் அவர் தொடர்ந்து வெற்று அறிக்கைகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைக்கும் ரகசிய முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனஇ, அதனை முறியடிக்கும் ஒரே சக்தி விஜய்க்கு மட்டுமே உள்ளது என்றும் செங்கோட்டையன் அதிரடியாகத் தெரிவித்தார்.

    Advertisement


    டென்ஷனில் அதிமுக

    அதுமட்டுமல்ல, எடப்பாடியின் சொந்தத் தொகுதியிலேயே தவெக போட்டியிட்டிருந்தால் அவருக்கு வெற்றி கிடைத்திருக்காது என்று கூறிய செங்கோட்டையன், வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை அரசியல் ரீதியாக வீழ்த்த தவெக தயாராகி வருவதாகவும், விரைவில் அதிமுகவின் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் தவெகவில் இணைய உள்ளதால், அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது என்றும் கூறினார்..

    மூத்த தலைவர் செங்கோட்டையனின் இந்த பேச்சு தான், அதிமுக தொண்டர்களிடையே நேற்று முதல் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறதாம்..

    விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து பாராட்டு

    இதனிடையே, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் விஜய் பாலாஜி ஆகியோருக்கு இடையே நடந்த சுவாரசியமான உரையாடல், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

    Advertisement

    இந்த விழாவில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் கே.ஜி.அருள்ராஜ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் விஜய் பாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையனை, அமைச்சர் விஜய் பாலாஜி நெகிழ்ச்சியோடு கட்டித் தழுவி வரவேற்றார்.

    தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே

    அப்போது அமைச்சர் விஜய் பாலாஜியைப் பார்த்த செங்கோட்டையன், "அப்புறம், நேத்து நடந்த ரிவ்யூ மீட்டிங்கில் தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே!" என்று பாராட்டு தெரிவித்தார்.

    அதற்கு விஜய் பாலாஜி, "எல்லாம் நீங்க சொன்னதைத்தான் அண்ணே ஃபாலோ பண்ணினேன்" என்று கூற, உடனே செங்கோட்டையன், "அப்புறம் என்ன... அடிச்சு விடுங்க!" என்று கலகலப்பாகக் கூறினார்.

    Advertisement

    அமைச்சர்களின் இந்த எதார்த்தமான, கலகலப்பான பேச்சை, அங்கிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பெரும் வியப்புடன் பார்த்தனர்.. சீனியர் ஜுனியர் என்ற பாகுபாடில்லாமல், இவர்கள் ஜாலியாக பேசி கொள்ளும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது...!!

    English Summary

    Sengottaiyan Hugs tvk Minister Vijay Balaji on Stage, Says “You Did a Great Job at Yesterday’s Meeting”