திமுக+ அதிமுக+ பாஜக கூட்டணி? மத்திய அமைச்சரவையில் DMK? குண்டை தூக்கி போட்ட பிரபலம்

  • சென்னை: திமுக, அதிமுக, பாஜக கூட்டணி உருவாகலாம் என பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். அது போல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏன் விசிகவை ஆதரிக்கிறார் என்பதையும் மணி விளக்கியுள்ளார்.

    Advertisement

    மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெறும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். அது போல் சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார். இது சம்பிரதாயம் என பார்க்கப்பட்டாலும் திமுக பங்கேற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இதனால் திமுக - பாஜக இடையே கூட்டணி உருவாகும் என தவெக கூறி வருகிறது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் மணி, 4th எஸ்டேட் தமிழ் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

    அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மேற்கொள்ள போகும் மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் திமுக எம்பிக்கள் இடம் பெற போகிறார்கள் என செய்திகள் வந்து பல மணி நேரம் ஆன நிலையிலும் திமுக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்த பேச்சுக்களை திமுக ரசிக்கிறது.

    அரசியலில் நிரந்தர எதிரி இல்லை என கூறிய கனிமொழி சோமு, திடீரென பல்டி அடித்தார். இதே கருத்தை வானதியும் பேசினார். நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடரின் கடைசி நாட்களில் அமித்ஷா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்ட போதிலும் திமுக எம்பிக்கள் பெரிய அளவில் எதிர்ப்பை காட்டவில்லை. தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜக மற்றும் திமுகவின் நிலைப்பாடுகள் விவாதத்துக்குள்ளாகியுள்ளன.

    Advertisement

    32 எம்பிக்களை (லோக்சபாவில் 22, மாநிலங்களவையில் 10) கொண்டுள்ள திமுகவுக்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படலாம். தவெக அரசை சமாளிக்க திமுகவுக்கு பாஜகவின் ஆதரவு தேவைப்படுகிறது. அது போல் திமுகவினர் பலர் மீது அமலாக்கத் துறை வழக்கு உள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் அதிகாரம் இல்லாமல் திமுகவால் இருக்க முடியாது.

    பாஜகவுக்கு இந்த எம்பிக்களின் பலம் தேவைப்படலாம். மத்தியில் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல், எம்பிக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு எதிர்கால கூட்டணி மாற்றங்கள் அமைய வாய்ப்புள்ளது.

    விசிகவின் வாக்குகள் தவெகவுக்கு போய்விட்டது என்பது திருமாவளவனுக்கு தெரிந்துவிட்டது. எனவேதான் தவெகவுடன் கூட்டணி என தனது பிறந்தநாள் விழாவில் அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கட்சியை காப்பாற்ற விஜய்யுடன் சென்றுவிடலாம். இல்லாவிட்டால் உள்ளதும் போய்விடும் என்பது அவருக்கு தெரியும். கட்சியின் கொள்கை, கோட்பாடுகளில் இருந்து ஷாநவாஸ் எப்போதோ விலகி போய்விட்டார். மேலும் விசிகவில் ஓரிருவரை தவிர அனைவரும் தவெகவுடன் கூட்டணி வைக்கவே விரும்புகிறார்கள். தவெக ஆட்சி அமைத்து 100 நாட்களில் பாஜகவுக்கு எதிராக திமுக செயல்பட்டது எப்படி என பத்திரிகையாளர் மணி கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிமுக, திமுக இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க முயன்றதாக குற்றச்சாட்டுகள் முன் வந்தன. இந்த நிலையில் சட்டசபையிலும் திமுகவும் அதிமுகவும் ஒரே வரிசையில் அமர்ந்துள்ளன. ்அதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிதக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு அளித்து பேசுகிறார். அது போல் உதயநிதி கைதையும் எடப்பாடி கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    Senior journalist Mani says that ADMK, BJP, DMK may form an alliance in future. Why VCK supports TVK?