சென்னை: விஜய்யையும் அவரது அரசையும் முதலாளித்துவ சிந்தனை மற்றும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட சக்திகளே இயக்குகின்றன. அனைவருக்கும் பொதுவான நன்மைகளை செய்யும் நோக்கம் இந்த அரசிடம் துளியும் இல்லை, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கும் சிலருக்கு மட்டுமே சாதகமான சூழலை உருவாக்குவதிலேயே இவர்களது கவனம் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளில் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதால், அவர்களால் உண்மைகளை வெளிக்கொண்டு வர முடியாது. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே, கஜானா காலியாகிவிட்டதாகக் கூறிவிட்டு, இப்போது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குத் தலா 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார்களை வழங்குவது எந்த வகையில் நிர்வாகச் சிக்கனம்? தேவைப்படுபவர்களுக்கு மட்டுமே வாகனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியை கூடப் பின்பற்றாமல், யாரிடம் கார் இருக்கிறது என்று கூட சரிபார்க்காமல், கார் கேட்பவர்களுக்கெல்லாம் வாரி வழங்குவது பொறுப்பற்ற செயலாகும். இது "ஊர் வீட்டு பொருளை தன் வீட்டுப் பொருளாக தானம் செய்வதற்கு" ஒப்பானது. திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட பட்ஜெட் மற்றும் நிதி மேலாண்மை காரணமாகவே, இப்போது கஜானாவில் பணம் உள்ளது. ஆனால், இந்த அரசுக்குப் பணத்தைச் சரியாகச் செலவு செய்யும் நிதி மேலாண்மைத் திறன் இல்லை. விஜய்யின் அரசியல் செயல்பாடுகள், நிர்வாகப் புரிதல் இல்லாமல், தனது கட்சிக்காரர்களை திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைந்துள்ளன. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த வெற்றிடத்தை, கார்ப்பரேட் மற்றும் முதலாளித்துவ மனப்பான்மை கொண்ட சக்திகள் பயன்படுத்திக்கொள்கின்றன. விஜய்யையும் அவரது தற்போதைய அரசையும் முதலாளித்துவ சிந்தனை மற்றும் ஆதிக்க மனப்பான்மை கொண்ட சக்திகளே இயக்குகின்றன. அனைவருக்கும் பொதுவான நன்மைகளைச் செய்யும் நோக்கம் இந்த அரசிடம் துளியும் இல்லை, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கும் சிலருக்கு மட்டுமே சாதகமான சூழலை உருவாக்குவதிலேயே இவர்களது கவனம் செலுத்தப்படுகிறது. எனவே விஜய் போன்றவர்களை இயக்குவது மிகவும் எளிது.. தமிழகத்தின் வணிகங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தனியார் மயமாக்கும் முயற்சியில் பிஜேபி போன்ற சக்திகள் பின்னணியில் இருந்து செயல்படுகின்றன, அந்தத் திட்டத்தை விஜய் எளிதாக நிறைவேற்றுவார்.. தமிழகத்தின் வணிகங்களையும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார் மயமாக்கும் நோக்கில் பாஜக போன்ற சக்திகளின் தூண்டுதலில் இந்த அரசு இயங்குவதாக தெரிகிறது. தமிழகம் மிக ஆபத்தான சூழலை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.75 லட்சம் மதிப்புள்ள கார்கள்
முதலாளித்துவ மனப்பான்மை
கார்ப்பரேட் கம்பெனிகள்