தாராபுரத்தில் தீயாக வேலை செய்த செந்தில் பாலாஜி.. கூட்டணி இல்லாமல் திமுக 2ம் இடம் பிடித்தது எப்படி?

  • திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக 2வது இடம் வருவதற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பணிகளே காரணம் என்று அக்கட்சியினர் மத்தியில் சொல்லப்படுகிறது. கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக வாக்குகளை எதிர்பார்த்ததை விடவும் அதிகளவில் திமுக நோக்கி செந்தில் பாலாஜி திருப்பி இருப்பதாகவும் திமுகவினர் உற்சாகத்துடன் கூறி வருகின்றனர்.

    Advertisement

    தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் தவெக வெற்றியை பெற்றுள்ளது. தவெகவினர் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெல்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தனர். அதேபோல் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் டெபாசிட் கூட வாங்க கூடாது என்று ஆவேசமாக களமிறங்கி பணியாற்றினர்.

    Advertisement

    ஆனால் திமுக இரு தொகுதிகளிலும் 2வது இடத்தை பிடித்துள்ளது. சட்டசபைத் தேர்தலில் கூட இரு தொகுதியிலும் திமுகவால் 2வது இடத்தை பிடிக்க முடியவில்லை. ஆனால் கூட்டணி கட்சிகளே இல்லாத நிலையில், திமுக மீண்டும் பழைய வாக்கு வங்கியை தக்க வைத்து கொண்டுள்ளது. சுமார் 30% வாக்குகளை திமுக கைப்பற்றியதால், அக்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    திமுக தலைமையும் இவ்வளவு பெரிய வாக்குகள் எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக அதிமுக வலுவாக இருக்கும் தாராபுரத்தில் 3வது இடத்திற்கு தள்ளப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இம்முறை களத்தில் திமுகவினர் செயல்பாடுகளால், தவெகவுக்கு கடுமையான போட்டியை கொடுத்திருக்கிறது. இதனால் தவெக எதிர்பார்த்த பெரிய வெற்றி கிடைக்காததால், அக்கட்சியினர் சோகம் அடைந்துள்ளனர்.

    Advertisement

    தாராபுரத்தில் திமுக மீண்டும் அதே அளவிலான வாக்கு வங்கியை தக்க வைக்க முக்கிய காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருந்திருக்கிறார். தாராபுரத்தில் கவுண்டர் சமூக வாக்குகள் நிச்சயமாக கை கொடுக்கும் என்று எடப்பாடி பழனிசாமியும், அதிமுகவும் நம்பி இருந்தனர். ஆனால் கவுண்டர் சமூக வாக்குகளை அதிகளவில் செந்தில் பாலாஜி திமுக பக்கம் திருப்பி இருக்கிறார்.

    இந்த இடைத்தேர்தலில் திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், இவ்வளவு வாக்குகளை பெற்றிருப்பதும் கட்சியினரின் உற்சாகத்திற்கு முக்கிய காரணம். தாராபுரத்தில் முபெ சாமிநாதன் பொறுப்பாளராக இருந்தாலும் முன்னாள் அமைச்சர்களான சக்கரபாணி மற்றும் செந்தில் பாலாஜி இருவரும் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு திமுகவுக்கு மிகப்பெரிய வலிமையை கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

    English Summary

    Senthil Balaji: Senthil Balaji Grassroots Efforts Credited for DMK's Second-Place Finish in Dharapuram Bypoll