திமுகவின் 3 திமிங்கலங்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் விஜய்! அப்போ எவ வேலு! இப்போ செந்தில் பாலாஜி.!

  • சென்னை: தமிழக அரசியலில் குதிரை பேர விவகாரம் தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதே விவகாரத்தை தமிழக வெற்றிக் கழகமும் எடுத்திருக்கிறது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இந்த விவகாரத்தில் அடிபடும் நிலையில், ஏற்கனவே 2 முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது

    Advertisement

    2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனாலும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியில் விஜய் அமர்வதற்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தது அனைவரும் அறிந்ததே.

    Advertisement

    இதை அடுத்து திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்ததால் ஆட்சி அமைந்தது.

    குதிரை பேரம்

    அதே நேரத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் விஜய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் பதவி., வாரிய தலைவர் பதவி உள்ளிட்டவற்றை தருவதாக கூறி குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக்கழகம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை தமிழக வெற்றிக்கழகம் அது தொடர்பாக எந்த பதிலையும் அளிக்கவில்லை.

    Advertisement

    அதிமுக எம்எல்ஏக்கள்

    இதற்கிடையே அடுத்தடுத்து அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது குதிரை பேர குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவது போல இருந்தாலும் நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என விஜய் தரப்பு பேசியது. அதற்கேற்றார் போல் நாங்களாகவே ராஜினாமா செய்தோம் என அதிமுக முன்னாள் எம்எல்ஏக்களும் விளக்கம் அளித்தனர். அதே நேரத்தில் ராஜினாமா செய்த எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

    விஜய் ஆட்சி

    இந்த நிலையில் விஜய் ஆட்சியை கவிழ்க்க தவெக எம்எல்ஏக்களை தொடர்பு கொண்டதாக இருந்த புகார் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு பேசியதாக தற்போது மூவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். மேலும் இதன் பின்னணியில் செந்தில் பாலாஜியும் அவரது சகோதரர் அசோக்குமாரும் இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

    Advertisement

    எவ வேலு

    இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர்கள் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி வருவதையும் கவனிக்க வேண்டும். ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறை டெண்டரில் முறைகேடு செய்ததாக திமுக முன்னாள் அமைச்சர் எவ வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் எவ வேலுவுக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையும் சோதனை செய்தது.

    செந்தில் பாலாஜி

    ஏற்கனவே கேஎன் நேரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதையும் கவனிக்க வேண்டும். தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த 50 நாட்களுக்குள்ளாகவே திமுகவின் முக்கிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. திமுக முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளை முடக்குவதற்காக வழக்குப்பதிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என திமுக குற்றம் சாட்டு நிலையில், தற்போது குதிரை பேர விவகாரத்தில் செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபடுவது குறிப்பிடத்தக்கது. இதனால் திமுக முகாமில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

    English Summary

    Political heat intensifies as Senthil Balaji's name surfaces in horse-trading allegations alongside cases involving other DMK leaders.