4 பக்கங்கள் தான் மாற்றம்.. மின்சார துறை கொள்கை விளக்க குறிப்பு.. டேட்டாவுடன் வந்த செந்தில் பாலாஜி!

  • சென்னை: 2025-26 மின்சாரத்துறை கொள்கை விளக்க குறிப்பில் சில பக்கங்களை மட்டும் மாற்றிவிட்டு அப்படியே அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் நகலெடுத்துள்ளதாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். அதேபோல் ஆட்கள் பற்றாக்குறையை தொடர்ச்சியாக சொல்லும் சிடிஆர் நிர்மல்குமார், அதேபோல் ஆட்களை வைத்துதான் திமுக ஆட்சியில் சீரான மின் விநியோகம் கொடுக்கப்பட்டதாகவும் சாடினார்.

    Advertisement

    சட்டசபையில் மின்சாரத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேச்சிற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், ஒரு வார்த்தை பேசினால் மறுவார்த்தை பேச எங்களுக்கு தெரியும்.. பேசிவிட்டு நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன் என்ற போதும், அது பொதுவெளிக்கு போகிறது. பதில் சொல்லாமல் ஊமையை இருக்க நாங்கள் சபைக்கு வரவில்லை.

    Advertisement

    அதேபோல் ஹார்ட் டிஸ்க் பற்றி கேட்டேன். பொதுவெளியில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசும் போதெல்லாம், சீரமைப்புகள்..முறைகேடுகள் என்றெல்லாம் சொல்லுகிறார். 493 துணை மின் நிலையங்கள் திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு, 122 துணை மின் நிலையங்கள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    நீங்கள் கொடுத்த வெள்ளை அறிக்கையில் 122 துணை மின் நிலையங்களின் பணிகள் நடந்து வருவதாக கூறினர். இதற்கு ரூ.5,066 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பணிகள் நடந்து வருவதாகவும் கூறினீர்கள். கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்திக்கு ஏற்ப வழித்தடங்களையும், கட்டமைப்புகளையும் திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் ஆட்கள் பற்றாக்குறை பற்றி பேசினார்கள்.

    Advertisement

    கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் இதே எண்ணிக்கையிலான ஆட்களை வைத்து தான் தமிழ்நாட்டில் சீரான மின் விநியோகம் நடைபெற்றது. இதற்காக மத்திய அரசின் பாராட்டையும் திமுக பெற்றது. 99 ஆயிரம் மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ள. தமிழக வரலாற்றில் 5 ஆண்டுகளில் இவ்வளவு மின் மாற்றிகள் அமைக்கப்பட்டதில்லை. அதேபோல் இந்த கொள்கை விளக்க குறிப்பு இரவு 10 மணிக்கு தான் வந்தது.

    6 துறைகள் இருக்கிறது.. இதனை படித்து முடிக்க இரவு 2.30 மணி ஆகிவிட்டது. மொத்தமாக 834 பக்கங்கள்.. இதனை படித்து தரவுகளை தயார் செய்ய வேண்டும். மின்சார துறை குறிப்பில் 4, 5 பக்கங்களில் தான் டேட்டாக்கள் இருக்கிறது. மற்றவை 2025-26ல் இருக்க கூடிய புள்ளி விவரங்களை நீக்கிவிட்டு, சரத்துகள் அப்படியே உள்ளது. வேறு எந்த மாற்றம் இல்லை. தவெக அரசின் 2 திட்டங்களை மட்டும் சேர்த்துள்ளார்கள் என்று தெரிவித்தார்.

    English Summary

    Senthil Balaji: Senthil Balaji Accuses Minister CTR Nirmal Kumar of Copying Electricity Department Policy Note