சென்னை: செப்டம்பர் 27 ஞாயிறு வேலை நாள் என்பது வங்கி ஊழியர்களுக்கு சாதாரணமான நாள் கிடையாது.. எத்தனை சிக்கல்களை அன்று ஒரே நாளில முடிக்க வேண்டும் தெரியுமா வங்கி ஊழியர்கள்.அது பற்றி விரிவாக பார்ப்போம். வழக்கமாக செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டிய கணக்கு வழக்குகளை, திங்கள்கிழமை வேலைநிறுத்தம் என்பதால், ஞாயிறு அன்று முன்கூட்டியே முடிக்க வேண்டிய கட்டாயமும் வங்கி ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ளது
வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை திட்டத்தை அறிவிக்க வேண்டும், ஓய்வூதியத்தை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்கள் வரும் செப்டம்பர் 28-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை 3 நாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்த மத்திய அரசு, வங்கி ஊழியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துவிட்டது. எனவே வேலை நிறுத்தம் நடைபெறுவது உறுதியாகி உள்ளது.
வேலை நிறுத்தமானது 3 நாள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 26-ந் தேதி 4-வது சனிக்கிழமை என்பதால் அன்றிலிருந்து 30-ந்தேதி வரை 5 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வங்கி சேவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி முக்கிய முடிவை எடுத்திருக்கிறது இதன்படி வருகிற ஞாயிற்றுக்கிழமை, அதாவது வேலை நிறுத்தம் தொடங்கும் நாளுக்கு முந்தைய நாளான 27-ந்தேதி வங்கிகளுக்கு வேலை நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ள, செப்டம்பர் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலான வேலைநிறுத்தம், அதற்கு முந்தைய வார இறுதி விடுமுறை நாட்களான 26 மற்றும் 27-ந்தேதியுடன் ஒத்துப்போவதை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் வங்கித் தேவைகளை பாதுகாக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்களின் உண்மையான வங்கித்தேவைகள் நீண்ட காலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து பொதுத்துறை வங்கிகளும், மண்டல ஊரக வங்கிகளும் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வழக்கம்போல் செயல்படும். அனைத்து வங்கிக்கிளைகள், அலுவலகங்கள், ஏ.டி.எம். கிளைகள் மற்றும் நாணயப் பெட்டகங்கள் 27-9-2026 அன்று முழுமையாக செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் நலனும், வசதியுமே அரசின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை நிதித்துறை மீண்டும் வலியுறுத்துகிறது. முன்மொழியப்பட்ட வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்குமாறு தொழிற்சங்கங்களுக்கு அரசும், வங்கி நிர்வாகங்களும் வேண்டுகோள் விடுத்துள்ளன. மேலும் அத்தியாவசிய வங்கி சேவைகள் தடையின்றி தொடர்வதை உறுதிசெய்யவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) என்பது வங்கி ஊழியர்களுக்கு ஒரு சாதாரண விடுமுறை நாள் ஆக இருக்க வேண்டியது வேலை நாளாக மாறி உள்ளது. அதுவும் வழக்கமான வேலை நாள் அல்ல.. ஒரு சவாலான வேலை நாளாக மாறி உள்ளது. செப்டம்பர் 28 (திங்கள்) தொடங்கவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் என்பது, செப்டம்பர் 30 அரைவருடக் கணக்கு முடிக்கும் நாள் வரை தொடர்கிறது. எனவே வரும் ஞாயிறு, அன்று அவர்களை ஒரே நாளில் மிகப்பெரிய வேலைப்பளு ஏற்பட போகிறது. ஏனெனில் வழக்கமாக செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டிய கணக்கு வழக்குகளை, திங்கள்கிழமை வேலைநிறுத்தம் என்பதால், ஞாயிறு அன்றே முன்கூட்டியே முடிக்க வேண்டிய கட்டாயம் வங்கி ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் வங்கி ஊழியர்கள் மார்ச் 31ம் தேதி எப்படி வேலை செய்வார்களோ, அதேபோல் தான் செப்டம்பர் 30ம் தேதியும் வேலை செய்வார்கள். எனவே அந்த நாளுக்காக வரும் ஞாயிறு அன்று, வட்டி கணக்கிடுதல், தணிக்கை அறிக்கைகள் தயார் செய்தல், நிலுவைக் கணக்குகளைச் சரிபார்த்தல் போன்ற பின்புலப் பணிகளை அவர்கள் முழுமையாகச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டள்ளது. அரசு அன்று வங்கி சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என முழு வேலை நாளாக அறிவித்திருப்பதால், வழக்கமான வாடிக்கையாளர் சேவைகளை முடித்துவிட்டு, மதியத்திற்கு மேல் வங்கி அரைவருட கணக்கு பணிகளை தொடங்குவார்கள் . இந்த பணி அன்று இன்று வரை தொடர அதிக வாய்ப்பு உள்ளது. 3 நாட்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளால், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையின் முழு ஓய்வையும் தியாகம் செய்துவிட்டு, அடுத்தடுத்த நாட்களில் வரவிருக்கும் தணிக்கை மற்றும் செயல்பாட்டு நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டிய நிலைக்கு வங்கி ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.