நுங்கம்பாக்கம் சுவாதி போல் கொலை நடக்கும்! பெண் வக்கீலை மிரட்டிய சீரியல் நடிகர் சரவணன் நாயர் கைது

  • சென்னை: நுங்கம்பாக்கம் சுவாதி கொலை போல் நடக்கும் என மிரட்டி, இளம்பெண் வழக்கறிஞரிடம் ரூ 40 லட்சத்தை ஏமாற்றியதாக சின்னத்திரை நடிகர் சரவணன் நாயர் கைது செய்யப்பட்டார்.

    Advertisement

    விருகம்பாக்கம் Taisha குடியிருப்பைச் சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவருடன் பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.

    Advertisement

    அதே குடியிருப்பை சேர்ந்தவர் நடிகர் சரவணன் நாயர். இவர் 15 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்டு வரும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார்.

    இவருடன் பழக்கம் ஏற்பட்ட போது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாராம். தொடர்ந்து தன்னை விரும்புவதாக கூறி 2023 ஆம் ஆண்டு முதல் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனராம்.

    இந்த நிலையில் நடிகர் சரவணனுக்கு ஏற்கெனவே பிரியா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து அவர்களுக்கு இரு குழந்தைகள் இருப்பது, தெரியவந்ததாம். இதனால் சரவணன், தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக புகார் கொடுத்துள்ளார்.

    Advertisement

    மேலும் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த போது தன்னிடம் இருந்து ரூ 40 லட்சம் பணத்தை சரவணன் பெற்றதாக புகாரில் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை கேட்ட போது நுங்கம்பாக்கம் சுவாதி போல் கொலை நடக்கும் என தன்னை சரவணன் மிரட்டிய ஆடியோ ஆதாரத்துடன் அந்த பெண் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சரவணன் நாயர் கைது செய்யப்பட்டுள்ளார்.