நல்ல ஷாஜகான் மும்தாஜுக்கு கல்லறை கட்டினார்.. இவர் தன் கட்சிக்கு சமாதி கட்டுகிறார்... ஜவாஹிருல்லா

  • நல்ல ஷாஜகான் மும்தாஜுக்கு கல்லறை கட்டினார், இந்த ஷாஜகான் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு சமாதி கட்டும் வேலைகளை செய்து வருகிறார். சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு கிடைக்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பும் சதி. இசுலாமியர்கள் நிறைந்த தொகுதிகளில் திமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்து, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது இசுலாமியர்கள் திமுக மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று. முஸ்லிம்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெறமுடியவில்லை என்பதே உண்மை என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.

    Advertisement

    நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் புனரமைப்பு முடிந்த நிலையில், ஆட்சியமைத்து ஒரு மாத காலத்திற்கு பிறகு இன்று திறக்கப்பட்டது. நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து நாகை சட்டமன்ற உறுப்பினர் இருக்கையில் அமர்ந்த மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சந்தித்து நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    Advertisement

    தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 5 பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை ; 3 வயது குழந்தை இறந்துள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சிங்கப்பெண் படை இருந்தும், போக்சோ வழக்குகள் அதிகம் பதியப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை தண்டிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அதிகரித்து விரைந்து வழக்குகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திமுக போட்ட சாலையில் பயணித்து திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் தயவால் போட்டியிட்டு வெற்றிபெற்று அமைச்சர் ஷாஜகான் திமுகவிற்கு எதிராக இப்படி பேசுவது ஆணவத்தின் வெளிப்பாடு. நல்ல ஷாஜகான் மும்தாஜுக்கு கல்லறை கட்டினார், இந்த ஷாஜகான் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு சமாதி கட்டும் வேலைகளை செய்து வருகிறார்.

    Advertisement

    சிறுபான்மையினர் வாக்கு திமுகவிற்கு கிடைக்கவில்லை என்பது திட்டமிட்டு பரப்பும் சதி. இசுலாமியர்கள் நிறைந்த தொகுதிகளில் திமுகவிற்கு அதிக வாக்குகள் கிடைத்து, டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளது இசுலாமியர்கள் திமுக மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு ஒரு சான்று. முஸ்லிம்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெறமுடியவில்லை என்பதே உண்மை.

    தவெக தேர்தல் அறிக்கையில் கொடுத்த ஒரு வாக்குறுதி கூட இதுவரை நிறைவேற்றவில்லை. அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமே கடந்த திமுக அரசு கொண்டுவந்த 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறது. டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படாத காரணத்தால் விவசாயிகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர் ஆகவே குருவை சாகுபடி செய்வதற்கு ஏற்ப விவசாயிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு ஜவாஹிருல்லா கூறினார்.

    English Summary

    Shah Jahan built a tomb for Mumtaz, but Minister Shahjahan is burying his own Muslim League party," says Jawahirullah, slamming the politician for actions damaging the party's future