ஷகிலா படுக்கையில் செய்த ஒரு தவறு.. 3 லட்சம் செலவு.. கழுத்தில் பட்டையுடன் கண்ணீர் வீடியோ? என்னாச்சு

  • சென்னை: பிரபல நடிகை ஷகிலா, கழுத்தில் கட்டுடன் மருத்துவமனை படுக்கையிலுள்ள போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. அவருக்கு என்ன ஆச்சு? என்று ரசிகர்கள் கலக்கமடைந்த நிலையில், அதற்கு ஷகிலாவே விளக்கம் ஒன்றை தந்துள்ளார்.. அத்துடன் முக்கிய அட்வைஸ் ஒன்றையும் தன்னுடைய ரசிகர்களுக்கு விடுத்துள்ளார். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    90-களின் காலகட்டத்தில் மலையாள சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஷகிலா. 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைத்துறையில் பயணித்து வருகிறார்..

    Advertisement

    நடிகை ஷகீலா படங்கள்

    இவரது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றாலே, முன்னணி ஹீரோக்களின் படங்கள் கூட வசூலில் தடுமாறிவிடும்.. அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தார். பிறகு ஆபாச மற்றும் கவர்ச்சிப் படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு, தமிழ் திரையுலகில் விஜய், அஜித், சிம்பு போன்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சின்ன சின்ன குணச்சித்திர கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கினார்.

    ஆனால், விஜய் டிவியின் "குக் வித் கோமாளி: நிகழ்ச்சியின் மூலம் தனது பிம்பத்தை முழுமையாக மாற்றி, ரசிகர்களின் அன்பைப் பெற்ற "அம்மா"வாக உருவெடுத்தார். இப்போது சினிமா, சீரியல், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் யூடியூப் என ஒரே நேரத்தில் பல தளங்களிலும் கவனம் செலுத்தி, பிரபலங்களை நேர்காணல் செய்து வருகிறார். அந்தவகையில் எப்போதுமே ஷகிலா பிஸியாகவே இருக்கிறார்.

    Advertisement

    கழுத்தில் பட்டையுடன்

    இந்நிலையில், கழுத்தில் பலத்த காயங்களுக்கு, கட்டு போட்டபடி, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறும் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள், "ஷகிலா அம்மா? உங்களுக்கு என்ன ஆச்சு?" என்று பதறிப்போய் கேள்விகளை கேட்டார்கள்..

    மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ள ஷகிலா தனது யூடியூப் பக்கத்தில் தன்னுடைய ரசிகர்களுக்காக விரிவான விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.. கழுத்துப்பட்டை (Neck Collar) அணிந்தபடி தோன்றும் அந்த வீடியோவில், தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சில காட்சிகளையும் அவர் ஷேர் செய்துள்ளார்..

    படுக்கையில் செய்த தவறு

    தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கான பின்னணி குறித்து பேசிய ஷகிலா, "நான் செல்போனை ரொம்ப நேரம் பயன்படுத்துவேன்.. எனக்கு மொபைல் கேம்ஸ் விளையாடும் பழக்கம் அதிகம் உண்டு. தினமும் கட்டிலில் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக்கொண்டே தொடர்ந்து 4 மணி நேரம் வரை போனில் கேம் விளையாடுவேன். டீ அல்லது காபி குடிக்க மட்டுமே எழுந்திருப்பேன்.

    Advertisement

    அதை முடித்துவிட்டு மறுபடியும் வந்து அதே கேமைத் தொடர்வேன். அதுமட்டுமல்லாமல், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபில் பல மணிநேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கமும் எனக்கு இருந்தது. Wrong Posture அதாவது தவறான உடல் நிலைப்பாட்டில் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தியதால், கழுத்தில் உள்ள முக்கிய நரம்புகள் மற்றும் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யும் அளவுக்கு எனக்கு நிலைமை மோசமாகிவிட்டது..

    ஆபரேஷனுக்கு ரூ. 3 லட்சம்

    இந்த ஆபரேஷனுக்கு ரூ. 3 லட்சம் வரை செலவாகியது.. படுக்கையிலிருந்து எழுந்திருப்பது, நடப்பது, சாப்பிடுவது போன்ற அடிப்படை தேவைகளுக்கு கூட இப்போது பராமரிப்பாளர்களின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

    Advertisement

    ஸ்மார்ட்போன் பயனுள்ள ஒரு கருவிதான், ஆனால் அதைத் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தாதீங்க.. முக்கியமாக, சின்ன குழந்தைகளிடம் செல்போன்களைக் கொடுத்து பழக்காதீங்க" என்று உருக்கமான வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, நடிகை ஷகிலா விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்..!!

    English Summary

    Shakeela’s One Bedtime Mistake.. Spent Rs 3 Lakh.. Unbelievable Story Behind Her Neck Brace