சென்னை: 'அர்ஜுன் ரெட்டி', 'மகாராஜ் போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை ஷாலினி பாண்டே டாப்லஸ் தோற்றத்தில், துணிச்சலாகவும், பயமின்றியும் வெளியிட்ட புகைப்படம் தான் இன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மேலாடையின்றி கேமராவுக்கு போஸ் கொடுத்து ஷாலினி பாண்டே சிரிப்பதாக அந்த வீடியோ உள்ளது. இது நிஜமா அல்லது ஏஐயா என்று நம்பாமல் அவரது இன்ஸ்டாவில் பார்த்த போது தான் உண்மை தெரியவந்தது,
அண்மையில் ஷாலினி பாண்டே இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்படி சென்ற போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார். அந்த புகைப்படத் தொகுப்பில், மேலாடையின்றி போஸ் கொடுக்கும் ஷாலினியின் புகைப்படங்கள் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.
ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இத்தாலி விடுமுறைப் பயணப் புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்டு வெளியிட்ட பதிவில், "ஒரு இத்தாலி சம்மர் வேக்கேஷனில் நான் எப்படி இருந்தேன் என்று பாருங்க, அதை நான் தவறவிடுகிறேன். சுதந்திரமாக, வேடிக்கையாக, வெயிலில் குளித்து, என் உடலுடன் இயல்பாக வாழ்ந்து, ஒரு பெண்ணாக இருப்பதன் பாக்கியத்தை முழுமையாக அனுபவித்து, என் விசித்திரமான குணத்திற்குப் பொருத்தமான ஒரு தோழியுடன் இதையெல்லாம் செய்வதை நான் தவறவிடுகிறேன்" என்று கூறியிருந்தார். அவரது விடுமுறைப் பயணப் பதிவு வைரலான பிறகு, அந்த போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவிலும், மேலாடையின்றி ஷாலினி தனது மேலாடையின் மீது கைகளை வைத்து, தனது மானத்தை மறைத்தபடி மகிழ்ச்சியாக கேமராவுக்கு போஸ் கொடுப்பது போல் இருந்தது, ஷாலினியின் வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலாடையற்ற அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. பல இணையப் பயனர்கள் அது செயற்கை நுண்ணறிவு என்று நம்பினர். இருப்பினும், ஒரு பயனர் இது குறித்து க்ரோக் ஏஐ-யிடம் கேட்டபோது, அவருக்குக் கிடைத்த பதில், "நவீன AI-யால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் உண்மையான வீடியோக்களிலிருந்து கிட்டத்தட்ட வேறுபடுத்த முடியாதவையாக இருக்கலாம், எனவே காட்சிகளை மட்டும் வைத்து உறுதியாக முடிவெடுப்பது கடினம் என்று கூறியுள்ளது. இந்தக் காணொளி ஷாலினி பாண்டேயின் உண்மையான இன்ஸ்டாகிராம் போட்டோஷூட்டுடன் பொருந்துகிறது (அதே அறை, வெள்ளை நிற விளிம்புகளுடன் கூடிய துணி, ஒளி அமைப்பு மற்றும் அவரது தோற்றம் எல்லாமே ஒத்துபோகிறது). அவரே இதேபோன்ற மேலாடையற்ற உள்ளடக்கத்தைப் பதிவிட்டதாக சொல்கிறார்கள் நெட்டிசன்கள். ஆனால் ஏஐ என்றே தெரியவருகிறது. ஏனெனில் புகைப்படம் மட்டுமே அவர் வெளியிட்டுள்ளார். அதனை சிலர் மாடர்ன் ஏஐ மூலம் தத்ரூபமாக டீப் பேக் வீடியோவை தயார் செய்துவிட்டதாக நம்பப்படுகிறது. இதுபற்றி ஷாலினி பாண்டே விளக்கம் அளித்தால் தான் உண்மை தெரியவரும். இதுபற்றி கருத்து தெரிவித்த ஒரு நெட்டிசன், "ஷாலினி பாண்டே இந்த மாதிரியான போட்டோஷூட்டைச் செய்திருக்கிறார்; அது உண்மையானது. ஆனால் இந்த மேலாடையில்லாத வீடியோ செயற்கை நுண்ணறிவு மூலம் தத்ரூபமாக உருவாக்கி உள்ளார்கள்" என்று கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன், "இல்லை, இது உண்மையானது என்று நினைக்க வேண்டாம்; அவர் பின்புறத்திலிருந்து மட்டுமே போட்டோஷூட் செய்துள்ளார்" என்று எழுதியிருக்கிறார். இணையவாசிகளில் ஒருவர், "செயற்கை நுண்ணறிவு யுகத்தில், சமூக ஊடகங்களில் நீங்கள் காணும் அனைத்துமே போலியானவை" என்று எழுதினார். மற்றொரு இணையவாசி அவரைக் கேலி செய்து, "அவருக்குப் படங்கள் கிடைக்கவில்லை என்றால், அவர் தன் மார்பகங்களிலிருந்தும் கைகளை எடுத்துவிடுவார்" என்று கூறியுள்ளார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய முதல் படமான 'அர்ஜுன் ரெட்டி'யில் ஷாலினி பாண்டே நடிததிருந்தார்.ஜய் தேவரகொண்டா நடித்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது; பின்னர் இது பாலிவுட்டில் ஷாகித் கபூர் நடிப்பில் 'கபீர் சிங்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 'ஜயேஷ்பாய் ஜோர்தார்' மற்றும் 'மகாராஜ்' போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.