பாக்யராஜின் பிரிவுக்கு பிறகு சாந்தனு போட்ட பதிவு.. சட்டென இணையத்தில் வைரலானது ஏன்?

  • சென்னை: தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் பிரபல நடிகர் சாந்தனு பாக்யராஜ்,.. சமீபகாலமாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில்முறை பயணத்திலும் ஏகப்பட்ட சவால்களையும், நிறைய மன உளைச்சல்களையும் சந்தித்து வந்த நிலையில், இப்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள ஒரு உருக்கமான வீடியோ பதிவு, நெட்டிசன்களிடம் மிகப்பெரிய கவனத்தை திருப்பி வருகிறது.

    Advertisement

    சினிமா வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த சீனியர் டைரக்டரும், நடிகருமான கே. பாக்யராஜின் திடீர் மறைவு, சாந்தனுவின் குடும்பத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா உலகையுமே உலுக்கிவிட்டு சென்றது.

    Advertisement

    சாந்தனு பாக்யராஜ்

    இப்போது சாந்தனு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.. அப்பாவின் பிரிவால் மீளா துயரில் மூழ்கியிருந்த சாந்தனு, தன்னுடைய மனவேதனையை அந்த வீடியோவில் ஷேர் செய்துள்ளார்..

    "கடந்த 2 மாதங்கள் என்னுடைய வாழ்நாளில் மிகவும் கடினமான கட்டமாக அமைந்தது. ஆனால், என் குடும்பத்தினர் இந்த சூழலில் எனக்குப் பக்கபலமாக நின்றார்கள்.. இந்த சோகமான தருணத்தில் ஆறுதலாகவும் துணையாகவும் நின்ற அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்,

    ஓடிடி ரிலீஸ் தேதி

    பல மாத போராட்டங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு பிறகு என்னுடைய பல்டி படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளது.. கடந்த மாதம் 10ம் தேதி இந்த படம் ஓடிடியில் வெளியானது. அந்தப் படத்திற்கு ரசிகர்கள் மற்றும் மக்களிடமிருந்து மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.. ரசிகர்களின் இந்த சப்போர்ட்டுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துகொள்கிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    அப்பாவின் இழப்பு ஒருபுறம் ஆட்டிப்படைக்க, மறுபுறம் அவர் நடிப்பில் உருவான திரைப்படத்தின் வெளியீட்டிலும் பல்வேறு தடைகள் நீடித்து வந்தன.

    பல்டி படம் சக்ஸஸ்

    மெட்ராஸ்காரன் படம் மூலம் தமிழில் பிரபலமான மலையாள நடிகர் ஷேன் நிகாம் லீடிங் ஹீரோவாகவும், சாந்தனு 2ம் நாயகனாகவும் நடித்துள்ள படம் பல்டி.. இது கடந்த 2025 செப்டம்பர் மாதமே தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிவிட்டது.

    உன்னி சிவலிங்கம் இயக்கத்தில், கபடி போட்டியை மையமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் டைரக்டர்கள் அல்போன்ஸ் புத்திரன், செல்வராகவன் ஆகியோர் எதிர்பாராத கேங்ஸ்டர் கேரக்டர்களில் நடித்திருந்தனர். தியேட்டர்களில் கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும், இந்த படத்தின் ஓடிடி வருகைக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.

    Advertisement

    மீண்டு வந்த சந்தோஷ்

    ஆனாலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட ஓடிடி ஒப்பந்தத் தொகை உடனடியாக கிடைக்காததால் ஓடிடி ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது. 2026 ஜனவரியில் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகியும் அது நடக்கவில்லை. கடந்த மே மாதம் வரை இந்த பேச்சுவார்த்தை இழுபறியாகவே நீடித்து வந்த நிலையில், அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, கடந்த ஜூலை 10 அன்று ஒருவழியாக இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

    அப்பாவின் மறைவால் ஏற்பட்ட ஆறாத் துயரத்திற்கு நடுவிலும், பல்டி படத்திற்கு ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த அமோக ஆதரவு சாந்தனுவிற்கு ஒரு மிகப்பெரிய ஆறுதலையும் மீண்டு வருவதற்கான நம்பிக்கையையும் கொடுத்துள்ளதாகவே தெரிகிறது.. துயரங்களை கடந்து மறுபடியும் கலைப்பணியில் கவனம் செலுத்தி வரும் சாந்தனுவின் இந்த உருக்கமான வீடியோ இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

    English Summary

    Shanthanu Bhagyaraj Post After Bhagyaraj's Death.. Why Did His New Video Go Viral Online?