சென்னை: அதிமுக மாஜிக்கள் எம்.சி.சம்பத், உடுமலை ராதா கிருஷ்ணன், வெள்ளமண்டி நடராஜன், கடம்பூர் ராஜு, வைகைச் செல்வன் உட்பட 11 அதிமுக முக்கியஸ்தர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந் தனர்.
நீண்ட நாட்களாக எந்த பதவியும், பொறுப்பும் வழங்காமல் அவர்களை வெயிட்டிங்கிலேயே வைத்திருந்தார் தவெக தலைவர் விஜய். இதனால் அதிர் ப்தியடைந்தனர். இதனை அறிந்த விஜய், அவர்கள் அனைவரையும் தவெகவின் துணைப்பொதுச்செயலாளராக நியமித்து கடந்த மாதம் அறிவித் தார். இதனைக் கடந்த அவர்களுக்கான முக்கியத்துவம் எதுவும் அடுத்தடுத்து நடக்கவில்லை. அறிவிப்போடு, நின்றுப்போனது. இதனால் மீண்டும் அதிர்ப்தி அடைந்துள்ளனர் அவர்கள்.
இந்த நிலையில், தனிப்பட்ட முறையில் விஜய்யை சந்தித்து அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக விவாதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். இது குறித்து, விஜய்க்கு தகவலும் தரப்பட்டது. ஆனால், விஜய்யிடமிருந்தோ, முக்கிய அமைச்சரிடமிருந்தோ எந்த ரெஸ்பான்சும் இல்லை. இதனால்மேலும், அப்-செட்டாகி, அதே மூடிலேயே தொடர்ந்து இருந்து வருகின்றனர். இது மட்டுமல்ல, தவெகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப் பட்டப்பிறகு அவர்களுக்கான பொறுப்பு என்னவென்று அறிவுறுத்த வேண்டாமா? பதவியை மட்டும் கொடுத்து விட்டு தங்களை செயல்படாமல் அப்படியே சும்மா இருக்க வைக்கிறார்களா? இப்படியே இருந்தால் எப்படி நாங்கள் அரசியல் செய்வது? என்கிற வருத்தங்கள் அவர்களிடத்தில் மேலோங்கி இருக்கிறது. இதனால், தவெகவில் இணைந்து, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான அதிமுக மாஜிக்களீடம் விரக்திதான் மேலோங்கி ஒஇருக்கிறது. குறிப்பாக, உடுமலை ராதாகிருஷ்ணன், வெள்ளமண்டி நடராஜன், எம்.சி.சம்பத் உள்ளிட்ட சிலர் தவெக விலிருந்து விலகி விடலாமா என யோசிக்கிறார்களாம். இதில், எம்.சி.சம்பத் தான் அதிகமாக கவலையில் இருக்கிறார். அவரோ, அதிமுகவுக்கு மீண்டும் போனால் மரியாதை இருக்காது ; அதனால் திமுகவுக்கு போகலாமா என்று ஆலோசிக்கிறாராம். ஆனால், இவரோடு இணைந்த மற்ற அதிமுக மாஜிக்கள், நெகட்டிவ் முடிவுகளை யோசிக்காதீர்கள். பொறுமையாக இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என சொல்லி அமைதிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவிலிருந்து தவெகவுக்கு வந்தவர்களுக்கு கட்சியில் பதவி கொடுத்தாச்சு. ஆனால், அரசு பதவிகளை யாரும் எதிர்பார்க்காதீர்கள். நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் உரிய மரியாதை உங்களுக்குத் தரப்படும் என சொல்லப்பட்டிருக்கிறது. இதனை ஏற்க மனமில்லாத மாஜிக்கள், விரைவில் தவெகவிலிருந்து ஒரு க்ரூப்பாக வெளியேறலாமா? என்கிற ஆலோசனையில் தீவிரமாக இருக்கி றார்கள். - சிறப்பு நிருபர் எழில்கொத்து புரோட்டா பேச்செல்லாம் ஓட்டாக மாறுமா? விஜய்யை நம்பாமல் ஸ்டாலினிடம் ஓடும் கூட்டணி கட்சிகள்?