சென்னை: தேர்தல் பிரச்சாரக் களத்தில் நின்றபோது, "திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் பெருகிவிட்டது.. இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்துவிட்டது" என்று மேடைதோறும் முழங்கியது தமிழக வெற்றிக் கழகம். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதானபோது, ஆளுங்கட்சியின் தலைமை மற்றும் முதல்வரின் குடும்பத்தையே நேரடியாக தொடர்புபடுத்தி அனல் பறக்கப் பேசியவர்கள் தவெக தலைவர்கள்.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருளை தமிழ்நாட்டை விட்டே அடியோடு ஒழிப்போம்" என்ற அந்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்து விஜய்யை அரியணையில் அமர்த்தினர். ஆனால், ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே தவெகவின் உண்மை முகம் அப்பட்டமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.
வருவாய் புலனாய்வுத் துறை (DRI) நாகப்பட்டினத்தில் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 135 கிலோ 'மெத்தம்பேட்டமைன்' (Methamphetamine) என்ற கொடிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்! இந்த மாபெரும் கடத்தலின் முக்கிய மூளையாகச் செயல்பட்டு கையும் களவுமாகப் பிடிபட்டவர் யார் தெரியுமா? தவெகவின் கீழ்வேளூர் தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான பூபாலன். இலங்கைக்கு கடல் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிற கட்சிகளை விரல் நீட்டிக் குற்றம் சாட்டிய தவெகவின் முக்கியத் தலைவரே இத்தகைய மெகா போதைப்பொருள் மாஃபியாவாக வலம் வந்தது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விவகாரம் பூதாகரமானதும், வழக்கம்போல தவெக தலைமை ஒரு அறிக்கையை வெளியிட்டு பூபாலனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூறி கைகழுவப் பார்க்கிறது. நேற்று வரை கட்சியில் முக்கியப் பொறுப்பில் இருந்து, தேர்தல் களப்பணிகளை வழிநடத்திய ஒருவருக்கு இந்த சர்வதேச போதை மாஃபியா தொடர்பு இருந்தது கட்சி தலைமைக்கு தெரியாதா? வெறும் சாதாரண நிர்வாகி மட்டுமே 300 கோடி ரூபாய் போதைக் கடத்தலை தனி ஆளாக நடத்திவிட முடியுமா? அவருக்குப் பின்னால் ஆளுங்கட்சியின் உயர் மட்ட புள்ளிகளின் ஆசி இருந்ததா இல்லையா? பிரச்சனை வந்தவுடன் "கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்" என்று கூறிவிட்டால் தவெகவின் பொறுப்பு முடிந்துவிடுமா? இது தவெக மீது எழும் முதல் குற்றச்சாட்டு அல்ல. சில மாதங்களுக்கு முன்புதான், கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியின் போது தவெக அமைச்சர் சரத்குமார் மொபைல் போன் திரையில் வெள்ளை நிற பவுடரை வைத்துப் பயன்படுத்திய வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது "அது குழந்தையின் மாத்திரை, அதை நசுக்கினேன்" என்று கூறிய சமாதானத்தை மக்கள் எவரும் முழுமையாக நம்பவில்லை. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அமைச்சரே சந்தேகத்துக்குரிய வகையில் பொது இடத்தில் நடந்துகொள்வதும், இப்போது தொகுதிப் பொறுப்பாளரே 300 கோடி ரூபாய் சிந்தடிக் போதைப்பொருளோடு பிடிபடுவதும் ஒன்றோடு ஒன்று இணைத்துப் பார்க்க வேண்டிய தீவிரமான பிரச்சனைகள். மற்ற கட்சிகளில் ஒரு சிறு தவறு நடந்தாலும் உடனடியாகப் பொங்கி எழுந்து அறிக்கைகளும் வீடியோக்களும் வெளியிடும் தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய், தன் சொந்தக் கட்சியின் முக்கியப் புள்ளி 300 கோடி போதைப்பொருள் வழக்கில் சிக்கியிருக்கும் இந்த நேரத்தில் வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? மேடைகளில் பஞ்ச் வசனம் பேசுவது மட்டுமே மக்கள் சேவையா? போதை இல்லாத தமிழ்நாடு அமைப்போம் என்று பொதுவெளியில் பேசிவிட்டு, திரைக்குப் பின்னால் சொந்தக் கட்சி நிர்வாகிகளே போதைப்பொருள் சாம்ராஜ்யத்தை நடத்த அனுமதிப்பதுதான் புதிய அரசியலா? ஜாபர் சாதிக் வழக்கில் அன்றைய ஆளுங்கட்சியைத் தாக்கிய விஜய், இன்று தன் சொந்தக் கட்சி நிர்வாகி சர்வதேச கடத்தலில் கைதாகும்போது அதே தார்மீகப் பொறுப்பை ஏற்பாரா? ஒருபுறம் இளைஞர்களை நல்வழிப்படுத்துவோம் என்று பேசிவிட்டு, மறுபுறம் இளம் தலைமுறையின் வாழ்வை அழிக்கும் மெத் போதைப்பொருள் நெட்வொர்க்கில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் பங்கெடுப்பது கடும் கண்டனத்துக்குரியது. இந்த வழக்கை வெறும் கீழ்மட்ட நிர்வாகியின் தனிப்பட்ட குற்றம் என்று சுருக்கிவிட முடியாது. இதில் தொடர்புடைய அனைத்து ஆளுங்கட்சி புள்ளிகளையும் தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை போதை மாஃபியாவிடம் அடகு வைக்க நினைத்தால், மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தலைமை உடனடியாக தன் மவுனத்தைக் கலைத்து தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க வேண்டும்!நாகையில் வெடித்த ₹300 கோடி அதிர்ச்சி!
'நீக்கம்' என்ற கண்துடைப்பு நடவடிக்கை போதுமா?
ஆனால் மக்கள் கேட்கும் கேள்வி இதுதான்:
ஐபிஎல் அரங்கில் சர்ச்சை பவுடர்... இப்போது மெத் வழக்கு!
முதல்வர் விஜயின் மவுனம் எதை உணர்த்துகிறது?
மக்களுக்கு விடை வேண்டும்!