போதை பொருள் கடத்தல்.. எச்சரித்த உளவுத்துறை! இதை கூட கட்டுப்படுத்த முடியாதா? ஆதவ்விடம் பாய்ந்த விஜய்!

  • சென்னை: நாகை மாவட்டத்தின் தவெக நிர்வாகி பூபாளனை, வேதாரண்யம் கடற் கரை வழியாக 137 கிலோ போதைப் பொருளை இலங்கைக்குக் கடந்த முயன்றதாக மத்திய அரசின் வருவாய்ப் புலானாய்வு துறையினர் கைது செய்த சம்பவம் கடந்த வாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    Advertisement

    தேர்தல் பிரச்சாரக் களத்தில் நின்றபோது, "திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் பெருகிவிட்டது.. இளைஞர்களின் எதிர்காலம் சீரழிந்துவிட்டது" என்று மேடைதோறும் முழங்கியது தமிழக வெற்றிக் கழகம். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைதானபோது, ஆளுங்கட்சியின் தலைமை மற்றும் முதல்வரின் குடும்பத்தையே நேரடியாக தொடர்புபடுத்தி அனல் பறக்கப் பேசியவர்கள் தவெக தலைவர்கள்.

    Advertisement

    "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போதைப்பொருளை தமிழ்நாட்டை விட்டே அடியோடு ஒழிப்போம்" என்ற அந்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்து விஜய்யை அரியணையில் அமர்த்தினர். ஆனால், ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே தவெகவின் உண்மை முகம் அப்பட்டமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.

    நாகையில் வெடித்த ₹300 கோடி அதிர்ச்சி!

    வருவாய் புலனாய்வுத் துறை (DRI) நாகப்பட்டினத்தில் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 135 கிலோ 'மெத்தம்பேட்டமைன்' (Methamphetamine) என்ற கொடிய போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்!

    இந்த மாபெரும் கடத்தலின் முக்கிய மூளையாகச் செயல்பட்டு கையும் களவுமாகப் பிடிபட்டவர் யார் தெரியுமா? தவெகவின் கீழ்வேளூர் தொகுதி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான பூபாலன். இலங்கைக்கு கடல் வழியாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிற கட்சிகளை விரல் நீட்டிக் குற்றம் சாட்டிய தவெகவின் முக்கியத் தலைவரே இத்தகைய மெகா போதைப்பொருள் மாஃபியாவாக வலம் வந்தது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Advertisement

    பூபாளனி டம் இத்துறையினர் நடத்தைய விசாரணையில், போதைப் பொருள் கடத்த லின் நெட் நொர்க் குறித்து பல தகவல்களை கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு விரிவான அறிக்கை ஒன்று வருவாய்ப் புலானாய்வுத்துறையினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம். அதில், தமிழகத்தில் பல ஆண்டுகாலமாக நடந்து வரும் போதைப்பொருள் கடத்தல் நெட் வொர்க் குறித்து விவரிக்கப்பட்டுள்ளதாம்.

    இதனையடுத்து, பூபாளனின் வாக்குமூலத்தை வைத்து வருவாய்ப் புலனாய்வுத்துறை அனுப்பிய அறிக் கையின் அடிப்படையில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறதாம் மத்திய உள்துறை அமைச்சகம். குறிப்பாக, தமிழகத்தில் புழங்கும் போதைப் பொருள் கடத்தல் அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.

    Advertisement

    இதற்கிடையே, தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் சிறு துறைமுகங்கள் வழியாக நடப்பதாக வரும் தகவல்களை கேள்விக்குள்ளாக்கி பேசிய புதுச்சேரி எம்.எல்.ஏவும், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனருமான சார்லஸ் மார்ட்டின், சிறு துறைமுகங்கள் துறையை வைத்துள்ள ஆதவ் அர்ஜுனா , இந்த போதை பொருள் கடத்தல் குறித்து ஏன் வாய்த்திறக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். ஆதவ்விற்கு எதிராக சமயம் கிடைக்கும் போதெல்லாம் சார்லஸ் குற்றம் சாட்டுவது, தவெக அரசுக்கு நெகட்டிவ் இமேஜ்ஜை தருவதாக முதல்வர் விஜய்யின் கவனத்துக்கு உளவுத்துறை தெரிவித்திருக்கிறதாம். இதனையடுத்து, ஆதவ் அர்ஜுனாவிடம் விசாரித்துள்ளார் முதல்வர் விஜய். அப்போது, "உங்க மைத்துனரின் நடவடிக்கைகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாதா? உங்கள் மாமனாரிடம் இதைப்பத்தி பேசுங்கள் " என அறிவுறுத்தியுள்ளார் விஜய்.

    Advertisement

    இதைத் தொடர்ந்து, "பண்டிச்சேரியோடு சார்லசின் அரசியலை நிறுத்திக் கொள்ளச் சொல்லுங்கள். தமிழகத்தில் வேண்டாம். சார்லசின் பேச்சுக்கு நானும் ரியாக்ட் காட்டினால் அது நல்லா யிருக்காது. வேறு மாதிரிப் போகும்" என்று தனது மனைவி மூலமாக மாமனார் மார்ட்டினுக்கு தகவல் சொல்லியிருக்கிறாராம் ஆதவ் அர்ஜுனா. தவெக அமைச்சர்கள் மத்தியில் மெல்லப்படும் ஹாட் டாபிக் இதுதான் என்கிறார்கள் தவெகவினர்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Shocking Drug Bust: Vijay is not happy with the TVK Leader Arrested for ₹300 Cr Meth