சேகர்பாபு காரை மறித்து அலறவிட்ட எஸ்.ஐ! 30 நிமிடத்தில் நடந்த அவசர பழிவாங்கல்.. உடைத்து பேசிய உமாபதி

  • சென்னை: "மதுவை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும்போது, பாரில் உட்கார்ந்து தேவையில்லாமல் சிகரெட் மற்றும் ஸ்நாக்ஸ்களுக்கு செய்யும் வீண் செலவுகள் குறையும்... இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதம் 3,000 ரூபாய் வரை சேமிக்க முடியும். அப்படியொரு சேமிப்பு ஏற்படும்போது, பெண்கள் அரசாங்கத்தின் 2500 அல்லது 3000 ரூபாய் உதவித்தொகையை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் உமாபதி

    Advertisement

    Tamil Mint என்ற சேனலுக்கு பேட்டி தந்துள்ள உமாபதி, "சங்கீதா தங்களது விவாகரத்து வழக்கை திரும்பப் பெற்றுள்ளார். குடும்பத்திற்குள் சில காரணங்களால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்திருந்தாலும், தற்போது மீண்டும் சேர்ந்து வாழ முன்வந்துள்ளனர். இது அவர்களுடைய முற்றிலும் தனிப்பட்ட குடும்ப விவகாரமாகும்.

    Advertisement

    பிரிந்த குடும்பம் இணைந்தது

    நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்தாலும், மீண்டும் அதே நீதிபதியிடம் 'நாங்கள் சேர்ந்து வாழ்கிறோம்' என்று சொல்வது நடப்பதுதானே... மணிரத்னம் இயக்கிய படத்தில் \ரேவதி, மோகன், கார்த்திக் ஆகியோர் நடித்திருப்பார்கள். விவாகரத்து நிலைக்கு சென்று பிரியும் தருணத்தில், ரயிலில் ஏறும் போது இரண்டு பேரும் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்.

    மணிரத்னம் அன்றைக்கே இந்த மாதிரியெல்லாம் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்று படம் எடுத்துவிட்டார். எனவே, இதெல்லாம் குடும்பத்தில் நடக்கும் சகஜமான விஷயங்கள்தான். இவர்களுடைய மகனைப் பற்றி கூட சோஷியல் மீடியாக்களில் "பெத்த மகனைத் துரத்தி விட்ட தந்தை" என்றெல்லாம் மீம்ஸ் போட்டார்கள்.

    Advertisement

    ஆனால், "என் லட்சியத்திற்காகத்தான் வந்திருக்கிறேன்; தனியாக நின்று ஜெயிக்க வேண்டும் என்று எங்க அப்பா சொன்னார்" என்று அவரே சொல்லிவிட்டால்.. அப்படி இருக்கும்போது நீங்கள் என்ன செய்ய முடியும்? இறுதியில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இதில் மற்றவர்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை.

    ஆன்லைனில் டாஸ்மாக்

    அதேபோல, தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்திவிட்டு நேரில் சென்று மதுபானம் பெற்றுக்கொள்ளும் திட்டம் சாத்தியமானால், அது பாராட்டுக்குரிய ஒரு நவீன திட்டமாகும். சினிமா படங்களுக்கு முன்பதிவு செய்வது போல, வரிசையில் நிற்காமல் குறிப்பிட்ட நேரத்தில் சென்று வாங்கி வர இது உதவியாக இருக்கும்.

    Advertisement

    21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுபானம் வழங்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தாலும், இப்போதுள்ள 10 வயது சிறுவர்கள் கூட முதியவர்களிடம் கொஞ்சம் காசு கொடுத்து எளிதாக வாங்கிவிடுகிறார்கள். மேலும், ஆன்லைனில் பணம் செலுத்தும் முறை வந்தாலும், டாஸ்மாக் பணியாளர்கள் கூடுதலாகப் பணம் கேட்டோ அல்லது தனிப்பட்ட கணக்கிற்குப் பணத்தைப் பெற வைத்தோ முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

    கேரள மாநிலத்தில் இரவு 8 மணிக்கே மதுக்கடைகள் மூடப்பட்டுவிடுகின்றன. அதனால், அங்குள்ளவர்கள் மதுவை வாங்கிக்கொண்டு நேரடியாக வீட்டிற்கு சென்று விடுகிறார்கள். இதனால் கடைகளில் தேவையில்லாத உணவுகளுக்கோ, பாட்டில்களுக்கோ கூடுதல் பணம் செலவழிக்காமல் குடும்பப் பொருளாதாரம் பாதுகாக்கப்படுகிறது.

    Advertisement

    டாஸ்மாக் பார்கள் & டோர் டெலிவரி

    அதேபோல சுகாதாரமற்ற முறையில் இயங்கும் டாஸ்மாக் பார்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். மதுபானங்களை வீட்டிற்கே நேரடியாக டோர் டெலிவரி செய்யும் திட்டத்தைக் கொண்டு வருவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

    மதுவை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும்போது, பாரில் உட்கார்ந்து தேவையில்லாமல் சிகரெட் மற்றும் தின்பண்டங்களுக்கு செய்யும் வீண் செலவுகள் குறையும்... இதன் மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ₹3,000 வரை சேமிக்க முடியும். அப்படியொரு சேமிப்பு ஏற்படும்போது, பெண்கள் அரசாங்கத்தின் 2500 அல்லது 3000 ரூபாய் உதவித்தொகையை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

    Advertisement

    சேகர் பாபு கார் நிறுத்தப்பட்டது

    முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி சென்றபோது அவரது கார் அரை மணி நேரம் நிறுத்தப்பட்டதற்கு அரசாங்கம் காரணம் கிடையாது. அவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பிரபலமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் உள்ளூர் காவல் ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் தங்களது பழைய தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ளவே வேண்டுமென்றே அவரது காரை நிறுத்தி பழிவாங்கியுள்ளனர். வேணடுமென்றே எஸ்ஐ பழி வாங்கியிருக்கிறார்.

    அரசாங்கம் இதை வேண்டுமென்றே செய்தது என்று சொல்ல முடியாது. காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் கடும் ஆத்திரத்தில் இருப்பார்கள். பொதுவாகக் காவல்துறையில் மிகவும் மரியாதையாகப் பேசி, அதே நேரத்தில் மறைமுகமாகப் பழிவாங்கி விடுவார்கள்.

    2 மாதங்களுக்கு முன்பு அமைச்சராக அதிகாரத்தில் இருந்த நிலைக்கும், இன்றைய நிலைக்கும் இடையே உள்ள இந்த மாற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை கற்பிக்கும் ஒரு கசப்பான பாடமாகும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Senior journalist Umapathi has expressed the view that having liquor delivered directly to one's home would eliminate the unnecessary expenses incurred on cigarettes and snacks while sitting in a bar—potentially saving a family up to ₹3,000 per month. He noted that with such savings, women would no longer need to rely on the government's financial assistance of ₹2,500 or ₹3,000.