சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கியமான அரசு பதவி கொடுத்த முதல்வர் விஜய்.. TANSIM தலைவராக நியமனம்!

  • சென்னை: சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி ஆளுங்கட்சியான தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு தமிழக ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) தலைவர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    Advertisement

    அதிமுக ஐடி விங் தலைவர், ஐ.டி விங் மண்டல செயலாளர், மாணவர் அணி செயலாளர் போன்ற பொறுப்புகளில் இருந்தவர் சிங்கை ராமச்சந்திரன். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் கோவையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    Advertisement

    சிங்கை ராமச்சந்திரனுக்கு பதவி

    இந்நிலையில், கடந்த மாதம் அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமச்சந்திரன் அடுத்த சில நாட்களில் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இந்நிலையில், தமிழக ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) தலைவராக சிங்கை ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணையின்படி, 'தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் புத்தக்க இயக்கம் ' (TANSIM) அமைப்பின் புதிய தலைவராக (Chairperson) சிங்கை ஜி. ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) துறை மூலம் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    யார் இந்த சிங்கை ராமச்சந்திரன்?

    அதிமுக மாணவரணி மாநில செயலாளராகச் செயல்பட்டு வந்தவர் சிங்கை ராமச்சந்திரன். அதற்கு முன்பு, அதிமுக ஐடி விங் தலைவராகவும், மண்டல செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். ராமச்சந்திரனின் தந்தை சிங்கை கோவிந்தராசுவும் அதிமுகவில் தனது மறைவு வரை செயல்பட்டவர். எம்.எல்.ஏவாக இருந்தவர்.

    ஐஐஎம் அகமதாபாத்தில் படித்த சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் அதிமுகவில் இணைந்திருந்தார். ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அவரது தலைமையில் பணியாற்ற வேண்டும் என்பதையே கனவாக நினைத்து படித்து, ஜெயலலிதாவின் கவனத்தைப் பெற்று அதிமுகவில் இணைந்தவர் சிங்கை ராமச்சந்திரன்.

    Advertisement

    முக்கிய பதவி

    கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அண்ணாமலையை எதிர்த்து கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டிருந்தார் சிங்கை ராமச்சந்திரன். அண்மையில் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் சிங்கை ராமச்சந்திரன். அதைத்தொடர்ந்து அவர் முதல்வர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.

    இநிந்லையில், சிங்கை ராமச்சந்திரனுக்கு, ஸ்டார்ட் அப் டிஎன் சி.இ.ஓவாக பொறுப்பு அளித்துள்ளார் முதலமைச்சர் விஜய். இந்த பதவியில் ஏற்கனவே இருந்த சிவராஜா ராமநாதன் கடந்த ஜூன் மாதம் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

    English Summary

    Singai Ramachandran, who recently left the AIADMK to join the ruling TVK, has been appointed as the head of the Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM).