சென்னை: அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலராகவும், மாணவரணி நிர்வாகியாகவும் செயல்பட்ட சிங்கை ராமச்சந்திரன், முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிவிட்டு அதிமுகவில் இருந்து விலகிய அவர், இன்று முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தவெக உறுப்பினராக இணைந்துள்ளார்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிர்வாகிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான்.
ஏற்கனவே எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். தற்போது அதிமுகவில் மேலும் ஒரு விக்கெட் விழுந்துள்ளது. அதிமுகவின் இளம் தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட சிங்கர ராமச்சந்திரன் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். சிங்கை ராமச்சந்திரன் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநிலச் செயலராக செயல்பட்டதுடன், மாணவரணி செயலாளராகவும் பணியாற்றியவர். அவரது தந்தை சிங்கை கோவிந்தராசு, தொழிலாளராக இருந்து பின்னர் அரசியலில் உயர்ந்தவர். இப்படி அரசியல் பின்னணி கொண்ட சிங்கை இராமச்சந்திரன் ஐஐஎம் அகமதாபாத்தில். படித்தவர் தொடர்ந்து ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது 'உங்க அப்பா ரொம்ப விசுவாசமானவர். நீங்களும் அப்படியே இருக்க வேண்டும்" என ஜெயலலிதா பாராட்டியது குறிப்பிடத்தக்கது' 2024 மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர் சிங்கை ராமச்சந்திரன். அந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் பி. கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அப்போது பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் இருந்தார். தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுகவில் இளம் பேச்சாளர்கள் உருவாக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எல்லோருக்கும் மேற்பட்ட பேச்சாளர்களை உருவாக்கினார். எடப்பாடி பழனிசாமியின் கையால் அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சார மேடைகளில் இளம் பேச்சாளர்கள் இடம் பிடித்தனர். இந்த நிலையில் கட்சியிலும், தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட சிங்கிய இராமச்சந்திரனுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இந்த சூழலில், கடந்த ஜூலை 23 ஆம் தேதி அதிமுகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக சிங்கை ராமச்சந்திரன் அறிவித்தார். இந்நிலையில்,சிங்கை ராமச்சந்திரன்
ஜெயலலிதா
மக்களவை தேர்தல்
எடப்பாடி பழனிசாமி
தவெகவில் இணைந்தார்
அதிமுகவில் இருந்து விலகிய சில வாரங்களுக்குப் பிறகு, அவர் தற்போது முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த பிறகு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு C. ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, அவரது முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். உங்கள் ஆதரவையும் ஆசிகளையும் வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.