அநியாயம் செய்பவனை விட.. அறிவாளிகளின் மௌனம் ஆபத்து.. யாரை சொல்கிறார் விசிக சிந்தனை செல்வன்

  • சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் மிசா, சர்க்காரியா கமிஷன் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டு சர்ச்சையாக வெடித்தது. ஆளும் தரப்பில் சிலரது பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில், கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்துள்ள அமைச்சர் சிந்தனை செல்வன் பதிவிட்டுள்ள ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்து விவாதமாக மாறியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்!

    Advertisement

    தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி பரபரப்பாக நடந்து வந்தது. இன்றைய தினத்தோடு சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்தது. நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் தனது பதிலுரையின்போது சர்க்காரியா கமிஷன் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார். அப்போது மிசா தொடர்பான விவகாரமும் இடம்பெற்றது.

    Advertisement

    சர்ச்சை

    இதனிடையே இன்று சட்டசபையில் அமைச்சர் நிர்மல்குமார் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, முதலமைச்சர் ஸ்டாலின் மிசா வழக்கில் கைது செய்யப்படவில்லை என்றும் வேறு ஒரு விவகாரத்தில் தான் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறியிருந்தார். இந்தக் கருத்து சட்டசபையில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவையிலேயே இதற்கு திமுக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அவைக்கு வெளியேயும் நிர்மல் குமாரின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதேபோல் இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்படி கட்சிகளை தாண்டி பலரும் இந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது.

    Advertisement

    சிந்தனை செல்வன்

    எந்தவொரு சம்பவத்தையோ அல்லது குறிப்பிட்ட நபரையோ நேரடியாக குறிப்பிடாமல் சிந்தனை செல்வன் தனது பதிவில், "அநியாயம் செய்பவனை விட, அது தவறு என்று தெரிந்தும் அமைதியாக இருக்கும் அறிவாளிகளின் மௌனம் மிகவும் ஆபத்தானது" என பதிவிட்டுள்ளார். அநியாயம் செய்பவர்களின் செயல்பாடுகளைவிட, அது தவறு என்பதை அறிந்தும் அதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பவர்களின் மௌனம் மிகவும் ஆபத்தானது என்பதே இதற்கு பொருளாகும்.

    அதாவது அநீதியை செய்பவர்கள் ஒரு சிலராக இருக்கலாம். ஆனால், அதனை பார்க்கும் நல்லவர்களும் அறிவாளிகளும் பயம் அல்லது "நமக்கு ஏன் வம்பு" என்ற எண்ணத்தால் அமைதியாக இருந்தால், அந்த மௌனம் அநீதிக்கு மறைமுகமான ஆதரவாக மாறிவிடும் என்பதே இந்த கருத்து. அநீதியை எதிர்க்க வேண்டியவர்கள் அமைதியாக இருப்பது, தவறு செய்பவர்களுக்கு மேலும் துணிச்சலை ஏற்படுத்தும் என்றும் இதன் தாக்கம் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கக்கூடும்!

    Advertisement

    விவாதம்

    சட்டசபையில் மிசா தொடர்பான விவாதம் நடைபெற்றுள்ள நிலையில், அமைச்சர் நிர்மல்குமாரின் சர்ச்சைக்குரிய கருத்தும் அதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வரும் சூழலிலும் சிந்தனை செல்வன் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அவர் யாருடைய பெயரையும் சம்பவத்தையும் குறிப்பிடாத நிலையில், நெட்டிசன்கள் இது தொடர்பாக பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

    English Summary

    VCK General Secretary Sinthanai Selvan posted a cryptic message about the danger of remaining silent when injustice occurs(சிந்தனை செல்வன் போட்ட ட்வீட): Sinthanai Selvan tweet latest news in tamil.