Gem Veeramani: ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவுக்கு எஸ்ஐடி மீண்டும் சம்மன்!

  • சென்னை: ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனா, நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Advertisement

    ஜெம் வீரமணிக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இந்த வழக்கில் தினந்தோறும் ஒரு அப்டேட் வந்து மக்களை அதிர வைக்கிறது. அந்த வகையில் வீரமணியின் மகள் அர்ச்சனா, சிங்கப்பூர் செல்லவிருந்தாராம்.

    Advertisement

    நேற்று பகல் 2.30 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்தார். அப்போது அவர் விமானத்தில் ஏறிவிட்டார். இந்த நிலையில் அங்கு வந்த சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் இருந்த அர்ச்சனாவை இறக்கிவிடும்படி கோரிக்கை விடுத்தனர்.

    இதையேற்ற விமான நிலைய அதிகாரிகள் அர்ச்சனாவை விமானத்தில் இறக்கினர். அவரது உடைமைகளும் இறக்கிவைக்கப்பட்டன. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு புலனாய்வு போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

    நேற்று மதியம் முதல் இரவு வரை விசாரணை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அர்ச்சனா தரப்பு வழக்கறிஞர்கள், "அர்ச்சனாவின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்வதாக எஸ்ஐடிக்கு கடிதம் எழுதி அனுப்பிய பிறகுதான் அர்ச்சனா புறப்பட்டார். ஆனால் போலீஸார் எந்த காரணமும் சொல்லாமல் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர்.

    Advertisement

    இந்த நிலையில் நேற்றைய தினம் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீஸார், ஜெம் வீரமணியின் மகள் அர்ச்சனாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

    இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அர்ச்சனா நாளை மீண்டும் ஆஜராகும்படி சிறப்பு புலனாய்வு போலீஸார் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.

    English Summary

    Special Investigation Team summoned Gem Veeramani daughter Archana as she is admitted in hospital. She was taken for inquiry when she was trying to go for Singapore.