சிவகார்த்திகேயனுக்கு திமுக தந்த அசைன்மெண்ட்? விஜய்யின் ஆட்டத்தை கலைக்கும் பப்ளிக் மேட்?

  • சென்னை: "விஜய் வந்தபிறகு, நாமளும் அரசியலுக்கு போகலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. உழைப்பு குறைவு, இணையத்தில் மட்டுமே புரமோஷன்கள் செய்தால் போதும், அரசியலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.. தனுஷ், சிவகார்த்திகேயன் இவர்கள் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

    Advertisement

    முன்னணி நடிகர்கள் சமீபகாலமாகவே தங்களின் ரசிகர்கள் கூட்டத்தை சந்திக்கும் நிகழ்ச்சிகளை விடாமல் நடத்தி வருகின்றனர்... தனுஷ் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வட்டமடித்த நிலையில், இப்போது சிவகார்த்திகேயனும் அரசியலில் குதிக்க உள்ளாரா என்ற சந்தேகங்கள் வலம் வருகின்றன.

    Advertisement

    சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை மாவட்ட வாரியாக சந்தித்து போட்டோ எடுத்துக்கொண்டார். இவரைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவும் அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று ரசிகர்களை சந்தித்திருந்தார்.. அந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் தனது நற்பணி இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை நேற்று முன்தினம் சென்னை போரூரில் சந்தித்துள்ளார்.

    நடிகர்களின் அரசியல் ஆசை

    இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, Realone மீடியா சேனலுக்கு அளித்த பேட்டியில், "விஜய் ஆட்சிக்கு வந்து 4 மாதமாகிவிட்டது.. அவர் எப்படி வெற்றி பெற்றார் என்பது இப்போதுவரை புதிராகவே உள்ளது. அரசியலுக்கு வரலாமா என்று சினிமா நடிகர்கள் முன்பு பயந்து கொண்டிருந்தனர்.. விஜயகாந்த் பிறகு நடிகர்களுக்கு அரசியலுக்கு வர பயம் இருந்தது.

    Advertisement

    ஆனால், விஜய் வந்தபிறகு, நாமளும் அரசியலுக்கு போகலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது. உழைப்பு குறைவு, இணையத்தில் மட்டுமே புரமோஷன்கள் செய்தால் போதும், அரசியலில் வெற்றிபெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.. தனுஷ், சிவகார்த்திகேயன் இவர்கள் எல்லாம் முதலமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

    சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்க கூட்டம்

    சிவகார்த்திகேயனின் நற்பணி இயக்க கூட்டம் நடந்த விதத்தை பார்க்கும்போது, இது வெறும் ரசிகர்கள் சந்திப்பா என்ற கேள்வி எழுகிறது... அதுவும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நேரத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருப்பது இன்னும் பல கேள்விகளை எழுப்புகிறது.

    சாதாரணமாக நற்பணி இயக்க கூட்டம் என்றால் ரசிகர்களுடன் சந்திப்பு, போட்டோ, சில அறிவுரைகள் என்று முடிந்துவிடும். ஆனால், இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் ஒருங்கிணைக்கப்பட்ட விதமும், சிவகார்த்திகேயன் அவர்களுடன் நெருக்கமாக பழகிய விதமும் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

    Advertisement
    ரசிகர்களை கூட்டி சிவகார்த்திகேயன் செய்த விஷயம்... பின்னணி என்ன? பக்கா பிளான்!

    ஏனென்றால், விஜய் அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்களுக்கும் அரசியலுக்கு வரலாம் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கமாக மாற்றுவது, நிர்வாகிகளை ஒருங்கிணைப்பது என அதற்கான அடித்தளத்தை அமைக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற பார்வை உருவாகியுள்ளது.

    சிவகார்த்திகேயன், தனுஷ்

    சிவகார்த்திகேயன், தனுஷ் இவர்கள் 2 பேருமே பொதுமக்களுக்காக எதையுமே இதுவரை செய்ததில்லையே.. வெள்ளம், புயல், கோவிட் எதுக்காகவாவது பொதுமக்களுக்காக களத்தில் இறங்கி வேலை பார்த்திருக்கிறார்களா? இவர்கள் முழுசா 50 படங்கள் நடிக்கவில்லை.. சினிமாவிலேயே சாதிக்கவேண்டியது நிறைய இருக்கு... சிவாஜி கணேசன் 250 படங்களில் நடித்த பிறகுதான் அரசியலுக்கு வந்தார்.

    Advertisement

    விஜய்யும் இதற்காக எடுத்த ரிஸ்க்.. அதேசமயம் விஜய்க்கு காலமும் ஒத்துழைப்பு தந்தது.. விஜயகாந்த் இறந்துவிட்டார், ரஜினியும் அரசியலுக்கு வராமல் ஒதுங்கிவிட்டார்.. கலைஞர், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், அரசியல் வருவதற்கான ரிஸ்க்கை விஜய் எடுத்தார்.. அரசியலில் பல வருட பிளானாகும்.

    தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு?

    திமுகவின் உந்துதல் காரணம்

    விஜய்யின் அரசியல் வளர்ச்சியை குழப்புவதற்காகத்தான் சிவகார்த்திகேயனை திமுக திட்டமிட்டு களத்தில் இறக்குகிறது.. இடைத்தேர்தலுக்கு முன்தினம் இப்படியொரு கூட்டத்தை நடத்த அசைன்மெண்ட் தந்ததும் திமுகதான்.. குறிப்பாக, இடைத்தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில் இந்தக் கூட்டம் ஏன் நடத்தப்பட்டது? திமுகவின் உந்துதல், தூண்டுதல்தான் காரணம்.

    Advertisement

    அதில் சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு விஷயம்தான் இப்போது முக்கியமாக பார்க்கப்படுகிறது. "நான் செல்ஃப் மேட் கிடையாது. பப்ளிக் மேட். பீப்பிள் மேட்" என்கிறார்.. இந்த வார்த்தையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது தனுஷை பார்த்து சொல்லவில்லை.. விஜய்யை பார்த்துதான் இந்த வார்த்தை சொல்கிறார் சிவகார்த்கேயன்.

    எனவே, இது சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வருவதற்கான ஆரம்பகட்டமாக இருக்கலாம். அதைவிட முக்கியமாக, விஜய்யின் அரசியல் களத்தில் இன்னொரு நடிகரை கொண்டு வந்து போட்டியை உருவாக்கி, மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.

    பருப்பில் உசந்தது மந்திரி, விஜய் அண்ணா முதல் மந்திரி.. தவெக நிர்வாகிக்கு தனுஷ் பாணியில் திமுக பதில்

    களமிறக்குகிறது திமுக

    சிவகார்த்திகேயன் கூட்டத்தில் திரண்டிருக்கும் 200 பேரை வைத்து அடுத்ததாக 2 ஆயிரம் பேரை உருவாக்குவது, அந்த 2 ஆயிரம் பேர் மூலம் 20 ஆயிரம் பேரை உருவாக்குவது, அதன்பிறகு 2 லட்சம் பேர் வரை கொண்டு செல்வது என ஒரு அமைப்பை உருவாக்கும் முயற்சிக்கிறார்கள்.. விஜய்யின் அரசியலையும், ஆட்டத்தையும் கலைப்பதற்குதான் சிவகார்த்திகேயனின் இந்த மீட்டிங் நடத்தப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனை திமுகதான் திட்டமிட்டு களத்தில் இறக்குகிறது" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

    English Summary

    Sivakarthikeyan DMK Assignment? “Public Made” Move to Disrupt Vijay’s Political Game?