நேற்று ஒரே நாளில் 6 கொலைகள் நடந்துள்ளன”.. தவெக அரசை காட்டமாக விமர்சித்த ஆர்.எஸ்.பாரதி!

  • சென்னை: "தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 கொலைகள் நடந்துள்ளன. நீதிமன்ற வாசலிலேயே கொலை நடக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு உள்ளது" என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Advertisement

    மேலும், அன்பில் மகேஷ் வீட்டில் நடைபெறும் ரெய்டு குறித்து, "திமுக பார்க்காத ரெய்டா? இதைவிட மோசமான ரெய்டுகளை திமுக பார்த்துள்ளது" என்று ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை மின் வெட்டு உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழக மக்கள் மத்தியில் இந்த ஆட்சியின் மீது கோபம் அதிகரித்து விட்டது.

    நேற்று ஒரே நாளில் தமிழ்நாட்டில் 6 கொலைகள் நடந்துள்ளன. நீதிமன்ற வாசலிலேயே ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு வந்தவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலகத்தில் பெண் போலீசிடம் தவெக கட்சியைச் சேர்ந்த ஒருவர் சில்மிஷம் செய்துள்ளார். பெண் போலீசாருக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இருக்கிறது.

    Advertisement

    எல்லா விலைவாசியும் ஏறிவிட்டது. அரிசி விலை ஒரு மூட்டைக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. பருப்பு, எண்ணெய், சர்க்கரை என எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும்போதே மின் வெட்டு நடக்கிறது." எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் பேசிய ஆர்.எஸ்.பாரதி, "தவெக அரசு மீது உள்ள அதிருப்தியை மறைக்கவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் ரெய்டு நடக்கிறது. இதென்ன ரெய்டு.. இதைவிட மோசமான ரெய்டுகளை எல்லாம் பார்த்தவர்கள் நாங்கள். பத்தோடு பதினொன்று அவ்வளவு தான்.

    உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக இன்னும் எத்தனை ரெய்டு நடத்தப் போகிறார்களோ.. ஆனால், ஸ்டாலினின் சாதனைகளை மக்கள் இப்போது உணர ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதா மீது நாங்கள் கொடுத்த புகார்கள் நிரூபிக்கப்பட்டது. ஆனால் எங்கள் மீது அவர்கள் கொடுத்த புகார்களை நிரூபிக்க முடியவில்லை". என்றார்.

    English Summary

    “Six murders took place in Tamil Nadu in a single day yesterday. The law and order situation is such that a murder occurs right at the court entrance,” said DMK Organizing Secretary RS Bharathi, strongly criticizing the situation.