டபுள் செஞ்சுரி போட்டாச்சு.. ஸ்ரேயாஸ் ஐயரா? இல்லங்க.. சின்ன வெங்காயம்! உரிக்காமலேயே கண்ணீர் வருதே!

  • சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய சந்தைகளில் வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் கிலோ 160 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதனால், சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில், தீபாவளி பண்டிகை இன்னும் வரவுள்ளதால் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளார். இதனால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Advertisement

    இல்லத்தரசிகள் தினம் தோறும் சமையல் செய்வதற்கு வெங்காயம் முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றனர். சமீபகாலமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே வருவதால் இல்லத்தரசிகள் வெங்காயத்தை பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

    Advertisement

    இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பெரிய வெங்காய மார்க்கெட்டுகளுக்கு தினந்தோறும் சின்ன வெங்காயம் 30 லாரிகளும் பெரிய வெங்காயம் 20 லாரிகள் மூலம் விற்பனைக்கு வருவது வழக்கம். கடந்த சில நாட்களாக கடுமையான வறட்சி வெங்காய வரத்து பாதியாக குறைந்து கொண்டே வந்தது.

    வெங்காய சந்தை

    இதனால் வெங்காயத்தின் விலையேற்றமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் வியாபாரிகள்
    பொதுமக்கள் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து மார்க்கெட்டுகளுக்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் வரத்து குறைவாக காணப்படுகிறது. உதாரணமாக திருச்சி வெங்காய சந்தைக்கு சின்ன வெங்காயம், மதுரை, திண்டுக்கல், நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் ஆகிய பகுதியில் இருந்து வரும்.

    Advertisement

    சின்ன வெங்காயம்

    தற்போது சின்ன வெங்காயம் வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. தூத்துக்குடி காய்கறி சந்தைக்கு வழக்கமாக 600, 700 முடைகளில் சின்ன வெங்காயம் வரும் நிலையில் தற்போது 300 முடைகள் மட்டுமே விற்பனைக்காக வருகிறது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 70 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது 160 ரூபாய் முதல் 170 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    பெரிய வெங்காயம்

    வெளிச்சந்தையில் 180 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் காரணமாக சின்ன வெங்காயம் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று பெரிய வெங்காயமும் வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் தற்போது கிலோ 80 ரூபாய் வரை விற்பனையாகிறது.

    Advertisement

    வரத்து குறைவு

    மழை காரணமாக பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து முற்றிலுமாக நின்றுள்ளதால் ஆந்திராவில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யப்படுவதால் கடந்த வாரங்களில் 25 ரூபாய் வரை கிலோ விற்பனையான தக்காளி தற்போது பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரை உயர்ந்து கிலோ 35 ரூபாய் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தீபாவளி பண்டிகை

    இந்த விலை உயர்வானது தீபாவளி பண்டிகை வரும் போது இன்னும் உயரத்தான் வாய்ப்புள்ளது.. வரத்து அதிகமானால் தான் விலை குறைய வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வெங்காயம் மற்றும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்வு காரணமாக விற்பனை மந்தமாக இருப்பதாகவும் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

    English Summary

    Tamil Nadu onion prices surge as supply declines, with small onions reaching ₹190 per kg and large onions ₹80 amid rain-related disruptions.