அமைச்சர் ஆனந்த் ரூட்டில்.. தவெக பக்கம் நகரும் கவிஞர் ஸ்னேகன்.. தடுக்க விரும்பாத கமல்ஹாசன்!

  • சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான கவிஞர் ஸ்னேகன், தவெக பக்கம் நகர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கவிஞர் ஸ்னேகன் நம்பி இருந்த சூழலில், கமல்ஹாசன் எந்தவித ஆலோசனையும் செய்யாமல் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததால் அதிருப்தியில் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

    Advertisement

    மக்கள் நீதி மய்யம் அரசியல் கட்சியை தொடங்கிய நாளில் இருந்தே கமல்ஹாசனுடன் பயணித்து வருபவர் கவிஞர் ஸ்னேகன். பிக் பாஸ் மேடையில் தொடங்கிய இந்த பயணம், நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. 2019 லோக்சபா தேர்தலில் கவிஞர் ஸ்னேசன் சிவகங்கை தொகுதியிலும், 2021 சட்டசபைத் தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

    Advertisement

    இதன்பின்னரும் கூட மநீம கட்சியிலேயே ஸ்னேகன் பயணித்து வந்தார். தொடர்ந்து 2024 லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து ராஜ்ய சபா சீட்டை பெற்று கொண்ட மக்கள் நீதி மய்யம், ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை. இதன்பின் 2026 சட்டசபைத் தேர்தலில் திமுக உடன் கமல்ஹாசன் நெருக்கமான உறவை கொண்டிருந்தார். இதனால் 6 தொகுதிகளாவது மநீக-வுக்கு ஒதுக்கப்படும் என்று பார்க்கப்பட்டது.

    ஆனால் சொந்த சின்னத்தில் நிற்க திமுக அனுமதி அளிக்காததால், திடீரென தேர்தலில் போட்டியிடுவதை புறக்கணித்து திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இதன் காரணமாக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் மாற்று கட்சிகளை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர். இந்த பட்டியலில் கவிஞர் ஸ்னேகனும் இணைய தயாராகி வருவதாக தெரிகிறது.

    Advertisement

    2026 சட்டசபைத் தேர்தலில் எப்படியாவது சீட் பெற்றுவிட வேண்டும் என்பதில் ஸ்னேகன் தீவிரமாக இருந்தார். இதற்காக திருவையாறு தொகுதியில் திமுக நிர்வாகிகளுடன் கூட நெருக்கம் காட்டினார். ஆனால் திடீரென எந்தவித ஆலோசனையும் செய்யாமல் கமல்ஹாசன் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று அறிவித்தார்.

    இதனால் கமல்ஹாசனின் அறிவிப்பால் ஸ்னேகன் அதிருப்தி அடைந்திருக்கிறார். இதனால் அரசியலில் இருந்து ஒதுங்கி கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளார். ஆனால் சில தவெக புள்ளிகள் தங்கள் பக்கம் ஸ்னேகனை இழுக்க காய் நகர்த்தி இருக்கின்றனர். ஊடகங்களிலும், மேடைகளிலும் பேச தவெகவுக்கு திறமையான ஆட்கள் தேவையாக இருக்கின்றனர்.

    Advertisement

    இதன் காரணமாக புஸ்ஸி ஆனந்த் மூலமாக தவெக பக்கம் செல்ல ஸ்னேகன் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அவருக்கு உடனடியாக செய்தி தொடர்பாளர் பொறுப்பும் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஸ்னேகனின் முடிவு தொடர்பாக கமல்ஹாசனிடம் சிலர் தெரியப்படுத்திய போதும், யாரையும் தடுக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறார்.

    English Summary

    Snehan: Poet Snehan Likely to Join TVK Following Discontent Over Kamal haasan Boycott of 2026 Assembly Polls