அப்போ இடைத்தேர்தலில் தவெகவிற்கு பாமக ஆதரவு இல்லையா.. வைரலாகும் அன்புமணி வீடியோ

  • சென்னை: இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களுக்கு எதிரான மனநிலை தொகுதிகளில் நிலவி வருவதாக பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசிய வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது.

    Advertisement

    அதில் அவர் பேசியதாவது, "மரகதம் குமரவேல் இனி மதுராந்தகம் தொகுதிக்குள் போக முடியாது. இவர் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். கடந்த 2014ல் காஞ்சிபுரம் எம்பியாக வெற்றி பெற்றிருந்தார்.

    Advertisement

    அதன் பிறகு 2021ல் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். 2026ல் மீண்டும் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்த வெற்றிக்கு பாமக மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தது. இவருக்காக வேலை செய்ததால்.. எங்கள் மாவட்ட செயலாளர் உட்பட 6 பேர் மீது பிசிஆர் சட்டம், எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு பாமக தொண்டர்கள் இந்த அம்மையாருக்கு கடுமையாக போராடி வெற்றிப் பெற வைத்தார்கள்.

    இப்படி ஓட்டு போட்டு வெற்றிப்பெற வைத்த தொகுதி மக்கள் என்ன முட்டாள்களா? இல்லை தமிழ்நாட்டு மக்கள்தான் முட்டாள்களா? இதுபோன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள். முதலமைச்சர் விஜய் அவர்களே! உங்கள் அமைச்சர்களுக்கு நான் சொல்ல வருவருது.. மக்களை அலட்சியப்படுத்தாதீர்கள். மக்களுடைய கருத்தை அலட்சியப்படுத்தாதீர்கள்.

    Advertisement

    உங்களுக்கு இத்தனை கோடி இளைஞர்கள் வாக்களித்தார்கள். அத்துனை பேரும்.. இடைத்தேர்தலில் உங்களுக்கு எதிராக வாக்களிப்பார்கள். நல்லாட்சி வர வேண்டும், ஒரு மாற்றம் வர வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் உங்களை தேர்வு செய்தார்கள். ஆனால்.. 20 நாட்களில் இதுபோன்று ஒரு மோசடி செயலை.. எவ்வளவு கஷ்டப்பட்டு இவரை எம்எல்ஏவாக எங்கள் கூட்டணி உருவாக்கியிருக்கிறது. அவர்கள் வேண்டுமென்றே ராஜினாமா செய்ய வைத்து.. 10 நிமிடத்திற்குள் உங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டு.. ஆனால் நிற்க வையுங்கள் பார்க்கலாம்!

    மரகதம் குமரவேல் இனி மதுராந்தம் தொகுதிக்குள் இனி போக முடியாது. போக முடியாது எனில்.. மக்கள் அங்கு கடுமையாக எதிர்க்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். சட்டமன்ற தேர்தல் சமயத்தில் பேசிய இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

    Advertisement

    கூட்டணிக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்பு

    எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, தவெக ஆட்சிக்கு வர.. விஜய் முதலமைச்சராக ஆதரவு கொடுத்த இடதுசாரிகளும் கூட இந்த இடைத்தேர்தலை கடுமையாக எதிர்க்கின்றனர். விஜய் முதலமைச்சராக நீடிக்க போதுமான ஆதரவு இருக்கிறது. நாங்கள் அமைச்சரவையில் பங்கெடுக்கவில்லை என்றாலும் கூட.. ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்க தேவையான ஆதரவை நாங்கள் கொடுப்போம் என்று இடதுசாரிகள் சொல்லியும்.. அதிமுகவிலிருந்து வந்த எம்எல்ஏக்களை விஜய் ஏற்றுக்கொண்டார். இதனால்தான் இடைத்தேர்தல் உருவானது. எனவே இதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறி.. இடதுசாரி கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருக்கின்றன.

    English Summary

    No PMK Support for TVK in Bypolls: Various quarters are reporting a prevailing sentiment against TVK candidates in the constituencies facing by-elections. Amidst this, a video featuring PMK leader Anbumani Ramadoss discussing his party's stance is being widely shared.