பெரும் போராட்டத்திற்கு பிறகு! மாணவர் பாரதிதாசனுக்கு ஒரே நாளில் ரூ 24 லட்சம் நிதி விடுவிப்பு!

  • சென்னை: மலேசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு நேற்று ஒரே நாளில் 23.95 லட்சம் ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. அவர் ஆராய்ச்சி மெட்டீரியல் வாங்கியதற்கு தற்போது வரை முறையான பில்களை செலுத்தவில்லை என சொல்லப்பட்ட நிலையில் நிதி விடுவிக்கப்பட்டது.

    Advertisement

    அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

    Advertisement

    அதில் ஏப்ரல் மாதம் முதல் உதவித்தொகை கேட்டு வருகிறேன். ஆனால் இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலைக்கழகத்தில் இருந்தே வெளியேற்றும் நிலை உள்ளது என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டிந்தார்.

    இந்த நிலையில் மாணவன் வீடியோ வெளியிட்டதில் உண்மையில்லை என சமூகநீதித் துறை விளக்கமளித்திருந்தது. மேலும் அவர் முறையாக பில்களை அனுப்பாவிட்டாலும் அவரது படிப்பு தடைபட கூடாது என்பதற்காக அவருக்கு நிதி விடுவிக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு நேற்று உறுதியளித்திருந்தார்.

    அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பாரதிதாசனுக்கு ரூ 23.95 லட்சம் விடுவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் ரூ12.21 லட்சம் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட நிலையில் அவரது ஆராய்ச்சி, வாழ்வியல் செலவுகளுக்கான பணம் ரூ 23.95 லட்சம் என ஆக மொத்தம் 2ஆம் ஆண்டுக்கான ரூ 36 லட்சம் நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டது.

    English Summary

    Social justice department releases Rs 24 lakhs for Tamil nadu student Bharathidasan who is pursuing research in Malaysia University.